சென்னையில் 3வது நாளாக பால் விநியோகம் பாதிப்பு!

தமிழகம்

சென்னையில் ஆவின் பால் விநியோகம் 3-வது நாளாக இன்று (ஜூன் 1) பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஆவின் நிறுவனம் மூலம் நாள்தோறும் 14 லட்சம் லிட்டர் ஆவின்பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இதற்கிடையில், ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளதால், சென்னையில் உள்ள மாதவரம் மத்திய பால் பண்ணை, சோழிங்கநல்லூர், அம்பத்தூர் பால் பண்ணைகளுக்கு பால்வரத்து குறைந்துள்ளது. இதனால், ஆவின் பால் விநியோகமும் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை சோழிங்கநல்லூர், காக்களூர் பண்ணைகளில் இன்றுடன் 3-வது நாளாக ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

காலை 6 மணி நிலவரப்படி பால் பாக்கெட்டுகள் ஏற்றப்படாமல் 15-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டன. மேலும் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, வேளச்சேரி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் வெகு தாமதமாகக் கிளம்பின.

அதேபோல் பூந்தமல்லி, திருவேற்காடு உள்ளிட்ட புறநகர் பகுதிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திலும் ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளன.

பால்வரத்து குறைவு, ஒப்பந்த தொழிலாளர்கள் வருகை குறைவு, பால் கேன்கள் தட்டுபாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் காரணமாக பால் பாக்கெட் உற்பத்தி மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், சென்னையில் பல்வேறு இடங்களுக்கு பால் சரியான நேரத்தில் செல்லாததால் வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச அளவில் பாலின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் ஐநாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு சார்பில் உலக பால் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் ஆவின் பால் விநியோகம் தாமதம் ஆகியுள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

இந்தியாவிலிருந்து இலங்கை செல்லும் முட்டைகளுக்கு எதிர்ப்பு!

தேர்தல் வியூக நிபுணர் சுனிலுக்கு சிறப்பு பரிசு கொடுத்த சித்தராமையா

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *