மாவட்ட வளர்ச்சி பணிகளைத் துரிதப்படுத்த சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்தும், சில மாவட்டங்களில் மாற்றம் செய்தும் தமிழக அரசு இன்று (மே 23) அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்றிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டிருக்கும் அரசாணையில்,
கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் அமைச்சருமான ஆர்.காந்தி திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும்,
திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சருமான சக்கரபாணி, கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும்,
மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சரும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதன் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மட்டும் பொறுப்பு அமைச்சராகவும் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய் மாவட்ட வாரியான பொறுப்பு அமைச்சர்களின் பட்டியல்…
சேலம் – நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு.
தேனி- ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி
திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி – பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு
தர்மபுரி – வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்
தென்காசி – வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்
ராமநாதபுரம்- நிதி மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு
காஞ்சிபுரம்- குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன்
திருநெல்வேலி- பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன்
மயிலாடுதுறை- சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்ய நாதன்.
கோயம்புத்தூர்- மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி
கிருஷ்ணகிரி- உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி
திருவள்ளூர் – கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி
பெரம்பலூர் – போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.
தஞ்சாவூர்- பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
நாகப்பட்டினம்- சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
பிரியா