மண்டேலாவை தொடர்ந்து அடுத்த விருதுக்கு தயாராகும் யோகிபாபு!

Uncategorized

எனக்கு இந்தளவு ரீச் கிடைக்க காரணம் இயக்குனர் அஷ்வின் தான் என நடிகர் யோகிபாபு தெரிவித்துள்ளார்.

2020-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான 68வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (ஜூலை 22) அறிவிக்கப்பட்டுள்ளது .

தேர்தல் – அரசியல் களத்தை பகடி செய்து வசனங்களின் மூலம் ரசிகர்களையும் சிந்திக்க வைத்த ‘மண்டேலா’ திரைப்படம் சிறந்த அறிமுக இயக்குனர், சிறந்த வசனத்திற்காக என இரண்டு தேசிய விருதுகளை குவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் யோகிபாபு,

தேசியவிருது என்பது மிகமிக முக்கியமான ஒன்று. ‘மண்டேலா’ படத்திற்கு சிறந்த அறிமுக இயக்குனர், சிறந்த வசனம் என இரண்டு விருதுகள் கிடைத்துள்ளது. இயக்குனர் மடோன் அஸ்வினின் சிந்தனைக்கு இந்த விருது மிகமிக சரியான விருது அவருக்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

இப்படத்திற்காக படக்குழுவில் அனைவரும் கஷ்டப்பட்டு நடித்தோம். இயக்குனர் மடோன் அஸ்வின் இப்படத்திற்கான கதையை சொல்லும் போதே புதுவிதமாக இருந்தது. படம் எடுக்கும் ஒவ்வொரு விதமும் புதுவிதமாக இருந்தது. அப்போதே இப்படம் பெரிய வெற்றிப்படமாக அமையும் என நம்பினோம் தற்போது அது நடந்திருக்கிறது.

கிரிக்கெட் உட்பட பல்வேறு துறை பிரபலங்களும் இத்திரைப்படத்திற்காக என்னை அழைத்து வாழ்த்தினர். எனக்கு அந்தளவு ரீச் கிடைக்க காரணம் இயக்குனர் அஷ்வின் தான். வசனங்களுக்காக விருது கொடுத்தது சரியான ஒன்று. சாக போகும் போதும் ‘முடிஞ்சா அந்த பையன படிக்க வை, அவன் ரொம்ப நல்லா எழுதறான் தெரியுமா? என்பது போன்ற வசனங்கள் மிக சிறப்பாக இருந்தது.

அவரின் அடுத்த படங்கள் குறித்த கேள்விக்கு,

நான் திரைப்பட உதவி இயக்குனராக தான் இந்த துறைக்கு வந்தேன். அப்போது வாய்ப்பு தேடும் போது அனுபவித்த வலிகளை நிறைய கதைகளா எழுதிருக்கேன். கையில மூன்று கதை வைச்சிருக்கேன். இப்போது பொம்மை நாயகின்னு நீலம் தயாரிப்பில் படம் பண்ணிட்ருக்கோம். அதுவும் மண்டேலா மாதிரி சிறப்பான படமாக அமையும் என தெரிவித்தார்.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *