போர் பதற்றம்: ஈரான் அணுமின் நிலையங்களை குறிவைக்கும் இஸ்ரேல்!

Published On:

| By Selvam

பல ஆண்டுகளாக நிழல் யுத்தத்தில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல் – ஈரான் நாடுகளுக்கிடையே நேரடி போர் ஏற்படும் அபாயம் உருவாகியிருக்கும் நிலையில்,  ஈரானின் அணுமின் நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு சாத்தியம் இருப்பதாகவும், இதுகுறித்து கவலைப்படுவதாகவும் ஐ.நா. சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரபேல் குரோஷி கூறியுள்ளார்.

டமாஸ்கசில் உள்ள ஈரான் துணை தூதரகம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது ஈரான் நேரடியாக தாக்குதல் நடத்தியது.

ADVERTISEMENT

300-க்கும் மேற்பட்ட டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை செலுத்தியது. இந்த ஆயுதங்களில் கிட்டத்தட்ட அனைத்தையும் இடைமறித்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இஸ்ரேலின்  இரண்டு விமான தளங்களை ஈரான் ஏவுகணைகள் தாக்கியுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

ADVERTISEMENT

ஈரான் தரப்பில் இருந்து முதல் முறையாக இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதால், இஸ்ரேல் கடும் ஆத்திரமடைந்துள்ளது.

ஈரானின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. ஈரானுக்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது என்பது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

ADVERTISEMENT

இது மோதலை அதிகரிக்கச் செய்யும் என்பதால், தாக்குதல் எண்ணத்தை கைவிடும்படி இஸ்ரேலை நட்பு நாடுகள் வலியுறுத்துகின்றன.

இந்த நிலையில், இஸ்ரேல் முழு அளவிலான தாக்குதலை முன்னெடுத்தால் ஈரான் நாட்டின் அணுமின் நிலையங்களை குறி வைக்கலாம் என கூறப்படுகிறது.

ஈரானின் அணுமின் நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு சாத்தியம் இருப்பதாகவும், இதுகுறித்து கவலைப்படுவதாகவும் ஐ.நா சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரபேல் குரோஷி கூறி உள்ளார்.

இது ஒருபுறமிருக்க, இஸ்ரேல் செய்த தவறுக்கு பதிலடியாக தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இத்துடன் அந்தப் பிரச்சினை முடிந்துவிட்டதாகவும் ஈரான் கூறி உள்ளது.

இஸ்ரேல் அரசு மற்றொரு தவற்றை செய்தால், ஈரானின் பதிலடி கடுமையாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது. எனவே, இனி இஸ்ரேலின் அடுத்த கட்ட நகர்வைப் பொறுத்து இரு நாடுகளுக்கிடையே நேரடி போர் மூளுமா அல்லது பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்பது தெரியவரும்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: முருங்கை – தால் சூப்

மின்னம்பலம் மெகா சர்வே: தர்மபுரி… தட்டிப் பறிப்பது யார்?

போட்டி போட்டு சதமடித்த நரைன் – பட்லர் : கடைசி பந்தில் வென்ற ராஜஸ்தான்!

மின்னம்பலம் மெகா சர்வே: நீலகிரி… சிகரம் தொடுவது யார்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share