காந்தி வழியை பின்பற்றுவோம்: ஐ.நா.பொதுச்செயலாளர்!

Published On:

| By Selvam

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ், காந்தி பிறந்த நாளான இன்று வன்முறையை தவிர்த்து விட்டு காந்தி கொள்கையான அகிம்சை வழியே அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஆங்கிலேயருக்கு எதிராக இந்திய சுதந்திர போராட்ட தலைவர்கள் பலரும் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுத்தபோது, காந்தியடிகள் அகிம்சை வழி போராட்டத்தை முன்னெடுத்தார்.

அமைதிக்கான நோபல் பரிசை பெறுவதற்காக காந்தியடிகள் ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார்

உலகின் முன்னணி தலைவர்களான தலாய்லாமா, நெல்சன் மண்டேலா உள்ளிட்டவர்கள் காந்தியடிகளின் அகிம்சை கொள்கையை பின்பற்றினர்.

2007-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொது சபை மகாத்மா காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ஆம் தேதியை, உலக அகிம்சை தினமாக அறிவித்தது.

அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் மகாத்மா காந்தி பிறந்தநாள் உலக அகிம்சை தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், காந்தி பிறந்தநாளான இன்று ஐ.நா சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் தனது ட்விட்டர் பதிவில், “மகாத்மா காந்தியின் பிறந்தநாளான ,உலக அகிம்சை தினத்தில் நாம் அனைவரிடமும் அமைதியையும், மரியாதையையும், கண்ணியத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இவற்றை நாம் கடைபிடிப்பதன் மூலமாக இன்றைய சவால்களை நாம் எதிர்கொள்ள முடியும். ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க கலாச்சாரங்கள் மற்றும் எல்லைகளை கடந்து நாம் அனைவரும் உழைக்க வேண்டும்.” என்று அன்டோனியோ குட்டரஸ் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

செல்வம்

சினிமா துறையில் பாலின பாகுபாடு : பிரியங்கா சோப்ரா சொன்ன அதிர்ச்சி தகவல்!

குந்தவை, நந்தினியாக மாறிய நடிகைகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share