தமிழ்நாட்டின் 50வது மற்றும் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் இன்று (ஆகஸ்ட் 19) பொறுப்பேற்றுள்ள நிலையில், முதல்வரின் அடுத்த முதன்மைச் செயலாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டின் தலைமை செயலாளராக கடந்த ஓராண்டுக்கும் மேலாக பணியாற்றி வந்த சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் நேற்று தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து முதல்வரின் (எஸ் 1) முதன்மைச் செயலாளராக இருந்த முருகானந்தம் புதிய தலைமைச் செயலாளராக இன்று நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார்.
இந்த நிலையில் முதல்வரின் அடுத்த முதன்மைச் செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த பதவிக்கு ”முதல்வரின் தனிச்செயலாளர் உமாநாத் அல்லது நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் டி.கார்த்திகேயன் வரலாம்” என்று தலைமை செயலக வட்டாரத்தில் சொல்லப்பட்டது.
கார்த்திகேயன் மீது விஜிலென்ஸ் விசாரணை இருப்பதால், முதல்வரின் முதன்மை செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமிக்கப்பட இருக்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம்! – யார் இவர்?
விலை உயராத தங்கம்…நகை பிரியர்களுக்கு நற்செய்தி!
டிமான்ட்டி காலனி-3 எப்போது?: இயக்குநர் பதில்!
”7.5% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது” : DTE எச்சரிக்கை!