சரியான நேரத்திற்கு உண்ணுதல், கவலை, கோபம், எரிச்சல் போன்ற மனநிலையின் போது உண்ணாமல் இருத்தல், காரம் குறைவாகவும், மசாலா மற்றும் துரித உணவுகளை தவிர்த்தல் அல்சர் ஏற்படாமல் தடுக்கும் வழிகளாகும். புகை, மது, பான்மசாலா பயன்பாட்டை அறவே தவிருங்கள்.
இரைப்பைப் புண்களை குணப்படுத்த அமில எதிர்ப்பு மருந்துகள், (ஆண்டாசிடுகள்) பிபிஐ என்னும் ப்ரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர் மருந்துகளும், ஊசி மருந்துகளும் அளிக்கப்படுகின்றன. இந்த மருந்துகளை தொடர்ந்து உட்கொள்வதன் மூலமும், சீரான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுவதன் மூலமும், மன உளைச்சல், கோபம் ஏற்படுத்தும் எதிர்மறை உணர்வுகளில் இருந்து விடுபடுவதன் மூலமும், தொண்ணூறு சதவிகிதம் குணமடைந்து விடலாம். மருந்துகள் பலன் தராமல் இரைப்பைப்புண்ணால் அவதிப்படுபவர்களுக்கும், முன் சிறுகுடல் அடைப்பு பிரச்சனை இருப்பவர்களுக்கும் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.
