இன்னைக்கு ரம்ஜான். காலைல எந்திச்சதில இருந்து பிரியானி வாசனை மன பிராந்தில ஓடிட்டு இருந்துச்சி… மதியம் 12 மணில இருந்து எப்படியும் வந்துரும்னு வாசல்லேயே பாத்துட்டு இருந்தேன்.
ஆனா, ‘மச்சான் கண்டிப்பா பிரியாணி உன் வீட்டுக்கே கொண்டு வருவேன்’னு சொன்ன நண்பன் ஷாஜகானை இன்னும் காணோம்.
வாய்விட்டு மறுபடியும் கேக்கனுமானு யோசனைல இருந்தப்ப… ’மச்சான்’னு வாசல்ல இருந்து சத்தம்.
ஆசையோட வாசல் பக்கம் போனா, ‘மச்சான் மாச கடைசி… கையில காசு இல்ல… வீட்ல என்ன இருக்கு?னு கேட்டுட்டே ராமசாமி வீட்டுக்குள்ள வந்தான்.
’அட நீ வேறடா’ ன்னு முழிச்சிட்டு இருந்தப்ப… ‘மச்சான் அந்தோணி… பிரியாணி ரெடி… வா சாப்பிடுலாம்’னு வந்துட்டான் ஷாஜகான்… கமகம பிரியாணியோட இனிதே முடிந்தது மார்ச் மாதம்! udpate kumaru memes trolls march 31
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… udpate kumaru memes trolls march 31

செங்காந்தள்
மூக்கைச் சுத்தம் செய்வது நல்ல விசயம்தான். ஆனால் புரோட்டாவுக்கு மாவு பிசையற போது வேண்டாம்னு சொல்லறோம்….!!!

Sasikumar J
டேவிட் வார்னர் தெலுங்கு படத்தில் நடிக்க இரண்டரை கோடி ரூபாய் சம்பளம்…!
வார்னர் மன சாட்சி ~ இது தெரியாம ரொம்ப வருஷமா IPL வந்து ஆடிட்டிடு இருந்துருக்கேன்…!!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
புது மேனேஜரையும் புது பொண்டாட்டியையும் முத வாரத்துலயே எதிர்த்து பேச ஆரம்பிச்சறனும். இல்லேன்னா, காலத்துக்கும் அடிமை வாழ்க்கை தான்.

ArulrajArun
ரம்ஜான் வாழ்த்து சொன்னதுக்கு பாய் கிட்ட இருந்து பிரியாணி வந்துச்சா
இல்ல இல்ல , thanks macha கொஞ்சம் busy ha இருக்கேன்னு bye nu reply தான் வந்துச்சு

தமிழ்🎯
மீ ~ரம்ஜான் வாழ்த்துக்கள் பாய், பிரியாணி வாங்க எப்போ வர்றது?
பாய் ~தீபாவளிக்கு கொஞ்சூண்டு முறுக்கு கேட்டதுக்கு காலியா ஆயிடுச்சின்னு சொல்லிட்டு, போன் கட் பண்ணுனவன் தானே நீயி 🤪

Mannar & company™🕗
அண்ணாச்சி… அந்த பாய் வந்தாருனா ரம்ஜான் வாழ்த்துக்கள் சொன்னேன்னு சொல்லிருங்க…
எந்த பாய்கிட்ட ?
எல்லா பாய்கிட்டயும் தான்யா அப்பதான் ஒருத்தராவது பிரியாணி தருவாங்க..!!

Actress Karthika Anjali
சுரேஷ் : நேத்து CSK மேட்ச் ல ஒரு ரன் கம்மியா எடுத்துருக்கலாம் டா 😮💨
ரமேஷ் : ஏன் டா அப்படி சொல்லுற? 🧐
சுரேஷ் : 7 ரன் வித்யாசத்துல தோந்தா THALA FOR A REASON னு சொல்லிருக்கலாம் ல

சங்கரிபாலா
பாய் வீட்டு் பிரியாணி கிடைக்கனும்னா
பாய் வீட்டில் பிறக்கனும் அல்லது
பாய் வீட்டுக்குப் பக்கத்திலாவது குடி இருக்கனும்….!!
ரெண்டுமே இந்த ஜென்மத்தில் நடக்கல.
ஜோகங்கள் 1001..😌😌