நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள படம் லியோ. இந்தப் படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரித்திருக்கிறார்.
த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், பிரியா ஆனந்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.
விஜய்யும் லோகேஷ் கனகராஜூம் இணையும் இரண்டாவது படம் என்பதால் இந்த படத்தின் அறிவிப்பில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது.
ஆனால் அதையும் தாண்டி இந்த படம் LCU (Lokesh Cinematic Universe) படமா இல்லையா என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் இன்று வரை ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்தப் படத்தின் படபிடிப்பு தொடங்கப்பட்டதிலிருந்தே இந்த படம் LCU-வாகத்தான் இருக்கும் என்று பல கற்பனை கதைகளை ரசிகர்களே சமூக வலைதளங்களில் எழுத தொடங்கி விட்டனர்.
லியோ படத்தின் ப்ரோமோஷன்களிலும் இது LCU படமா இல்லையா என்று இயக்குனரிடமே நேரடியாக பல கேள்விகள் கேட்கப்பட்டது.
ஆனால் படம் வெளியாகும் வரை பொறுத்து இருந்து பாருங்கள் என்று இயக்குனர் கூறிவிட்டார்.
லியோ படம் வெளியாக இன்னும் ஒரு நாள் தான் உள்ளது. இந்நிலையில் லியோ LCU படம் தான் என்பதை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி செய்திருகிறார்.
லியோ படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் படக்குழுவினரை வாழ்த்தி பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில் “#LCU all the best team” என்று உதயநிதி ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார். இதன் மூலமாக லியோ LCU படம் தான் என்பது உறுதியாகிவிட்டது.
Thalabathy @actorvijay Anna’s #Leo 👍🏽👍🏽 👍🏽@Dir_Lokesh excellent filmmaking , @anirudhofficial music , @anbariv master @7screenstudio 👏👏👏#LCU 😉! All the best team !
— Udhay (@Udhaystalin) October 17, 2023
ஏற்கனவே நடிகர் கமல்ஹாசன் அவர்கள் லியோ படத்திற்கு குரல் கொடுத்திருப்பதாக சில தகவல்கள் கூறப்படுவதால், ஒருவேளை இந்த படத்தில் கமல்ஹாசனின் கேமியோ இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லியோ படத்திற்கு டிக்கெட் கிடைக்காமல் பல ரசிகர்கள் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றனர்.
தற்போது உதயநிதி ஸ்டாலின் அவர்களின் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து விட்டது.
கார்த்திக் ராஜா
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!