கோவையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மாமன்னர் ராஜேந்திர சோழனோடு ஒப்பிட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கொடிசியா மைதானத்தில் இன்று(டிசம்பர் 25) நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 20 துறைகளின் சார்பில் சுமார் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும் கோவை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வைத்தார்.
முன்னதாக விழாவில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசினார். அவர் பேசுகையில்,
“ராஜராஜசோழன் ராஜேந்திர சோழனை பெற்று சான்றோனாக்கினார். அதுபோல் சின்னவரை பெற்று சான்றோனாக்கியுள்ளார் தளபதி.
கடந்த ஆண்டுகளில் பெற்ற வளர்ச்சியை விட இந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு இரட்டிப்பு வளர்ச்சி பெறும். அன்னூர் தொழிற்பூங்கா அமைப்பது தொடர்பாக அரசியல் கட்சியினர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். ஆனால் விவசாய நிலங்களை எடுக்காமல் அங்குள்ள கார்ப்பரேட் நிலங்களை மட்டுமே எடுப்போம்.” என்று பேசினார்.
ஏற்கெனவே திமுக வாரிசு அரசியல் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், நேரடியாக முதல்வர் ஸ்டாலினையும், அமைச்சர் உதயநிதியையும் மாமன்னர்களோடு அமைச்சர் செந்தில் பாலாஜி ஒப்பிட்டு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
டெஸ்ட் சாம்பியன்ஷிப் : இறுதிப்போட்டி வாய்ப்பில் தடம்பதித்த இந்தியா
அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் சேர்த்துச் செயல்படுகிறோம்: உதயநிதி ஸ்டாலின்
