”உதிரன் வருகிறான்”: கங்குவா அப்டேட்!

Published On:

| By Monisha

udhiran varukiran ganguva update

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் கங்குவா. இந்த படத்தில் நடிகர் சூர்யா இரு வேறு வித்தியாசமான தோற்றங்களில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஃபேண்டஸி கலந்த சரித்திர படமாக உருவாகும் கங்குவா தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது.

சமீபத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கங்குவா படத்தின் செகண்ட் லுக்  போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று (ஜனவரி 26) கங்குவா படத்தின் புதிய அறிவிப்பை முன்னிட்டு ஒரு போஸ்டர் வெளியாகி உள்ளது. அந்த போஸ்டரில், கையில் ரத்த கறையுடன் தங்க காசுகள் உள்ளது. ‘உதிரன்’ நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது கங்குவா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அறிவிப்பாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

2024 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 11 ஆம் தேதி கங்குவா படம் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

காற்றில் கலந்த கீதமே…!

தனுஷ் படத்தை இயக்கும் அடுத்த தெலுங்கு இயக்குனர் இவரா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share