பிளஸ் 2 பொதுத்தேர்வு : ஸ்டாலின், உதயநிதி, விஜய் வாழ்த்து!

Published On:

| By christopher

udhayanithi, vijay wishes plus 2 students

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வெழுத உள்ள மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ரவி, தவெக தலைவர் விஜய் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். udhayanithi, vijay wishes plus 2 students

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று (மார்ச் 3) தொடங்கிறது. தமிழ்நாட்டில் தமிழ்மொழி பாடத்துடன் இன்று தொடங்கி வருகிற 25-ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

இதற்காக மாநிலம் முழுவதும் 3,316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 7,518 பள்ளிகளில் இருந்து 4.24 லட்சம் மாணவியர் உட்பட 8.03 லட்சம் மாணவர்கள், 18,344 தனித்தேர்வர்கள், 145 கைதிகள் என மொத்தம் 8.21 லட்சம் பேர் தேர்வு எழுதவுள்ளனர்.

இதேபோல், புதுச்சேரியிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வுகள் வரும் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வினை 86 தனியார் பள்ளியை சேர்ந்த 6 ஆயிரத்து 992 மாணவர்களும், 362 தனித் தேர்வர்களும் தேர்வெழுதுகின்றனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில், பிளஸ் 2 தேர்வெழுத உள்ள மாணவர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் udhayanithi, vijay wishes plus 2 students

பொதுத்தேர்வை எழுதவுள்ள மாணவர்களே… மதிப்பெண்கள் உங்கள் அறிவுத்திறனுக்கான மதிப்பீடுகள் அல்ல; வாழ்வின் அடுத்தநிலைக்கான படிக்கட்டுகள்! Stay calm, do your best, and succeed. All the best!

ADVERTISEMENT

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கேட்கப்படும் கேள்விகளுக்கு தெளிவாக பதில்களை எழுதுங்கள். எவ்வித பதட்டமும் வேண்டாம்.

படிக்கிற ஆர்வத்துடன் உங்கள் உடல்நலன் மீதும் கவனம் செலுத்துங்கள். தேர்வு காலம் முழுமையும் புத்துணர்ச்சியோடு நீங்கள் இருப்பது மிக முக்கியம். தேர்வில் நீங்கள் அனைவரும் வெற்றி பெறவும், சாதனை புரியவும் என் அன்பும், வாழ்த்தும்!

ஆளுநர் ஆர்.என்.ரவி udhayanithi, vijay wishes plus 2 students

பிளஸ்2 தேர்வு எழுதும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் எனது சிறப்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

உங்கள் தேர்வுகளை அமைதியாகவும் நம்பிக்கையுடனும் அணுகுங்கள். முன்கூட்டியே தேர்வு மையத்தை அடையவும். ஒவ்வொரு கேள்வியையும் கவனமாகப் படித்து, உங்களுக்கு எளிதாகத் தெரிந்தவற்றுக்கு விடை எழுதத் தொடங்கவும். ஒரு கேள்வி சவாலானதாக உணர்ந்தால், ஆழமாக பெரு மூச்சு விட்டு, சில நொடிகள் அமைதி காத்தால் – தெளிவாகும் நமது மனம் விடைகளை கண்டுபிடிக்கும்.

அன்பான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களே, இந்த நேரத்தில் மாணவ, மாணவியர்களுக்கான உங்களுடைய உணர்வுபூர்வ ஆதரவு முக்கியமானது. தயவு செய்து வீட்டுச் சூழலை மன அழுத்தமில்லாமல் வைத்திருங்கள். உங்கள் பிள்ளைகள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

பொதுத்தேர்வு எழுதவுள்ள 12-ம் வகுப்பைச் சேர்ந்த மாணவச் செல்வங்களுக்கு #AllTheBest! எந்த அச்சமும் இன்றி, தங்களின் கல்வித்திறனை, தேர்வெனும் களத்தில் சிறப்பாக வெளிக்காட்டி, நீங்கள் அனைவரும் #AllPass செய்து , சிறப்பான முறையில் வெற்றி பெற்று, உங்கள் கனவுகள் மெய்ப்பட வாழ்த்துகிறேன்! இந்த 12 – ஆம் வகுப்பு தேர்வை சந்திக்கும் அனைவருமே வெற்றியாளர்தான் என்பதை நினைவில் கொள்க!

தவெக தலைவர் விஜய் udhayanithi, vijay wishes plus 2 students

“தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பொதுத் தேர்வு எழுத உள்ள 11 & 12ஆம் வகுப்பைச் சேர்ந்த அன்புத் தம்பிகள் மற்றும் தங்கைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பொதுத் தேர்வினைத் துணிவுடன், தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு, தேர்வில் வெற்றி பெற்று, வாழ்வில் சிகரம் தொட வாழ்த்துகிறேன்.

அமைச்சர் அன்பில் மகேஷ்

11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவச் செல்வங்கள் பொதுத்தேர்வு எழுதவுள்ளார்கள். மாணவச் செல்வங்கள் நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் தேர்வு எழுதுங்கள். இத்தனை ஆண்டுகாலமாக எழுதிய தேர்வுகளைப் போலவே இதுவும் ஒரு தேர்வுதான் எனும் மனநிலையோடு தேர்வறைக்குள் நுழையுங்கள். வளமான எதிர்காலம் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அன்பு மாணவச் செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share