”அவரே பாராட்டிட்டாரு” மகிழ்ச்சியில் திளைக்கும் ‘லவ்வர்’ மணிகண்டன்

Published On:

| By Manjula

udhayanidhi wishes lover movie

குட்நைட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மணிகண்டன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘லவ்வர்’. சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.

இப்படத்தில் மணிகண்டனுடன் இணைந்து ஸ்ரீ கெளரி பிரியா ரெட்டி, கண்ணா ரவி, ஹரிஷ் குமார், கீதா கைலாசம், ஹரிணி, நிகிலா சங்கர், அருணாசலேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ADVERTISEMENT

அறிமுக இயக்குனர் பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ‘லவ்வர்’ படக்குழுவினரை தொலைபேசி வாயிலாக பாராட்டியதாக, மணிகண்டன் தெரிவித்து இருக்கிறார்.

ADVERTISEMENT

இதுகுறித்து மணிகண்டன் தன்னுடைய எக்ஸ் பதிவில், ”உங்கள் வாழ்த்தை தொலைபேசி வாயிலாக பெற்றதில் மகிழ்ச்சி. எங்களுடைய ‘லவ்வர்’ படத்தினை நீங்கள் விரும்பி ரசித்தீர்கள் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

என்னை போன்ற வளரும் கலைஞர்களின் நடிப்பு விரிவாக பாராட்டப்படுவதில் மகிழ்ச்சி. இதனால் அடுத்தடுத்து இதுபோன்ற கதாபாத்திரங்களை செய்வதற்கு உத்வேகம் கிடைக்கிறது,” என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சவரனுக்கு ரூ.160 அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

சக்தி இசைக்குழுவிற்கு கிராமி விருது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share