“ED-க்கும் மோடிக்கும் பயப்பட மாட்டோம்”… உதயநிதி பேட்டி!

Published On:

| By Selvam

Udhayanidhi Stalin says we are not afraid of ed

“ED அல்ல மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம்” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (மே 24) தெரிவித்துள்ளார். Udhayanidhi Stalin says we are not afraid of ed

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சென்றுள்ளார். Udhayanidhi Stalin says we are not afraid of ed

இன்று செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலினிடம், “அமலாக்கத்துறை ரெய்டுக்கு பயந்து தான் முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருக்கிறாரே” என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், “தமிழகத்திற்கான நிதி உரிமைகளை கேட்பதற்காக தான் முதல்வர் ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் இதில் அரசியல் செய்கிறார். Udhayanidhi Stalin says we are not afraid of ed

ED அல்ல மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம். அமலாக்கத்துறை எங்களை மிரட்ட பார்த்தார்கள். மிரட்டி அடிபணிய வைக்க திமுக அடிமைக் கட்சி கிடையாது. திமுக என்பது சுயமரியாதை கட்சி. தவறு செய்தவர்கள் தான் பயப்பட வேண்டும். நாங்கள் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்ல. அமலாக்கத்துறை சோதனையை சட்டப்படி சந்திப்போம்” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share