2கே கிட்ஸுக்கு அட்வைஸ் பிடிக்காது… மாணவர்கள் மத்தியில் உதயநிதி கலகல!

Published On:

| By Selvam

udhayanidhi stalin says 2k kids

2கே கிட்ஸுக்கு அட்வைஸ் செய்தால் சுத்தமா பிடிக்காது என்பது எனக்கு தெரியும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (மே 14) தெரிவித்துள்ளார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டுதலுக்கான கல்லூரி கனவு 2025 நிகழ்ச்சியை தமிழ்நாடு முழுவதும் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்து, கல்லூரி கனவு 2025 உயர்கல்வி வழிகாட்டி புத்தகத்தினை வெளியிட்டார்.

 udhayanidhi stalin says 2k kids

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உண்டு உறைவிட பயிற்சி பெற்று மத்திய அரசின் பணியாளர் தேர்வு வாரியம் (SSC), இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) மற்றும் வங்கிப்பணி தேர்வுகளில் வெற்றி பெற்ற 58 மாணவர்களை பாராட்டி கேடயங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நான் முதல்வன் கல்லூரிக்கனவு 2025 தொடக்க விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “முதலமைச்சருடைய கனவுத்திட்டமான “நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், இந்த கல்லூரிக்கனவு – 2025 திட்டத்தை துவங்கி வைப்பதிலும், SSC, RRB மற்றும் IBPS ஆகிய போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி, உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.

இங்கே ஏராளமான மாணவர்கள், மாணவிகள் வந்து இருக்கின்றீர்கள். அதே போல, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், Zoom call மூலமாக, காணொளி காட்சி மூலமாக பல்வேறு மாணவர்கள் இணைந்துள்ளார்கள். udhayanidhi stalin says 2k kids

நீங்கள் எல்லாருமே School முடிச்சிட்டு College பற்றிய கனவுகளோட இங்கே வந்து இருக்கின்றீர்கள். 2K கிட்ஸ் உங்களுக்கு அட்வைஸ் பண்ணினால் சுத்தமா பிடிக்காது என்று எனக்கு தெரியும். தந்தை பெரியார் அடிக்கடி சொல்வார், “யார் எதை சொன்னாலும், அதை அப்படியே ஏத்துக்காத. ஏன், எதுக்கு, எப்படின்னு கேள்வி கேளு. அப்படி கேள்வி கேட்டு அது உன்னுடைய பகுத்தறிவுக்கும் புத்திக்கும் எட்டுனா மட்டும் அதை ஏத்துக்கன்னு” தந்தை பெரியார் சொல்வார்.

தந்தை பெரியார் சொன்ன விஷயத்தை யார் ஃபாலோ பண்றாங்களோ இல்லையோ, இங்க வந்திருக்கக்கூடிய Gen Z இளைஞர்களான நீங்க மட்டும் தான் அதிகமா ஃபாலோ செய்கிறீர்கள்.
அந்த அளவுக்கு இயல்பிலேயே அறிவும், ஆற்றலையும் பெற்ற உங்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. udhayanidhi stalin says 2k kids

பள்ளிக்கூட படிப்பை முடித்து விட்டு. நீங்கள் எல்லாம் உயர்கல்விக்காக வெளி உலகத்துக்கு இப்பதான் போகப்போகிறீர்கள். உங்களை பத்திரமா கையை பிடிச்சு அழைச்சுட்டுப் போய், உங்களுக்கெல்லாம் ஒரு சரியான எதிர்காலத்தை அமைச்சு கொடுக்கிறதுக்காகத்தான், இந்த ‘கல்லூரிக்கனவு’ திட்டம் செயல்படுத்தப்படுது.

பல்வேறு சூழல்களால உயர்கல்வி சேர தயங்குற மாணவர்கள் இருக்கின்றார்கள். அவங்களை கண்டுபிடித்து, உரிய வழிகாட்டுதல்களை கொடுத்து, கல்லூரியில சேர்த்து விடுறது தான் இந்த கல்லூரிக்கனவு திட்டத்தினுடைய ஒரே நோக்கம்.

 udhayanidhi stalin says 2k kids

அப்படி தான், “கல்லூரி கனவு” மூலமாக ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சம் மாணவர்களை நாம் உயர்கல்வி படிக்க வைக்க போகிறோம். நீங்க ஸ்கூல் படிக்கும்போது, “10 ஆம் வகுப்பு தேர்வு மிக, மிக முக்கியம். அது தான் உங்களுடைய வாழ்க்கைக்கு அடித்தளம்” என்று உங்களுடைய
பெற்றோர்கள், ஆசிரியர்கள் சொல்லி இருப்பார்கள்.

அடுத்து, பிளஸ் 2 போகிறபோது, “பிளஸ் 2 தான் உங்க வாழ்க்கையை மாற்றப்போகிறது என்று சொல்லியிருப்பார்கள். இப்போ, காலேஜ்ல ஒழுங்கா படிச்சா தான் வாழ்க்கையில எல்லாமே கிடைக்கும்ன்னு சொல்லி உங்களை பயமுறுத்துவார்கள். udhayanidhi stalin says 2k kids

இது ஏதோ உங்களை பயமுறுத்த மட்டுமே சொல்லுகின்ற விஷயம் கிடையாது. படிப்பு தான் உங்களுடைய வாழ்க்கையை மாத்துறதுக்கான ஒரே டர்னிங் பாய்ண்ட்” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். udhayanidhi stalin says 2k kids

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share