தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் மானியக்கோரிக்கை இன்று (ஜூன் 27) நடைபெற்றது.
இதில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
“தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிக்காக ஒருங்கிணைந்த மையம் அமைக்கப்படும்.
நான் முதல்வன் திட்டம், தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்ட நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும்.
அரசின் முக்கிய திட்டங்களை கண்காணிக்க மாவட்ட அளவில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை கண்காணிப்பு அலகு ஏற்படுத்தப்படும்.
ஒரு புள்ளி இயல் அலுவலர் மற்றும் புள்ளி இயல் ஆய்வாளர் கொண்டு அந்தந்த மாவட்ட புள்ளியியல் துணை இயக்குனர் கீழ் செயல்படும்.
ரூ.100 கோடி மதிப்பீட்டில் கல்லூரி பட்டப்படிப்பை முடித்து வேலை தேடும் இளைஞர்களுக்கு பட்டப்படிப்பு, தனித்திறன் மற்றும் ஆர்வங்களுக்கு ஏற்ப திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை அணுகுவதற்காக திறன் தமிழ்நாடு – நிறைப் பள்ளிகள் திட்டம் துவங்கப்படும்.
சிறந்த தொழில்நுட்பங்கள் மூலம் முழு மற்றும் பகுதி அளவு மானியத்துடன் Skill vouchers, Internship வழங்கப்படும்.
முதலமைச்சரின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் திறன் சார்ந்த படிப்புகள் வெற்றிகரமாக செயல்படுத்துவதை தொடர்ந்து 45 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் துணை மருத்துவ படிப்புகளுக்கு விரிவுபடுத்தப்படும்.
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் கிராமப்புறம் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் சிறந்த 1000 மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளித்து உயர் வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும்.
ரூ.1,185 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம் முதற்கட்டமாக 8 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். மகளிருக்கு பயனளிக்கும் அனைத்து தகவல்களைத் தரும் மகளிர் தகவல் வங்கி உருவாக்கப்படும்.
அரசு பள்ளிகளில் 8 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு உளவியல் பரிசோதனை மூலம் திறமைகளை கண்டறிய திறமை மதீப்பிட்டு தளம் உருவாக்கப்படும்.
பள்ளிகளில் தொழில் முனைவு குறித்த பாடத்திட்டம் உருவாக்கப்படும்.
அரசு பள்ளிகளில் இறுதி ஆண்டு படித்து வரும் மாணவிகளுக்கு தொழில்துறை சார்ந்த பணியிட பயிற்சி அளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
INDvsENG : மழை பெய்து போட்டி ரத்தானால் இந்தியா வெளியேறிவிடுமா?