‘டாடா’வை வாங்கும் ரெட் ஜெயன்ட்

Published On:

| By Kavi

red giant releases tata movie

தமிழ் சினிமா உலகில் கடந்த 2022 ஆம் வருடம் திரையரங்குகளில் 196 நேரடி தமிழ் திரைப்படங்கள் வெளியானது.

இவற்றில் கேஜிஎஃப்-2, விருமன், கார்கி, கணம் படங்களை தவிர்த்து வெற்றி பெற்ற திரைப்படங்களை வெளியிட்ட நிறுவனம் ரெட் ஜெயன்ட் மூவீஸ்.

ADVERTISEMENT

இதன் தலைவர் தமிழ்நாடு அமைச்சராக பொறுப்பேற்றதால் இனி அந்த நிறுவனத்தின் தாக்கம் தமிழ் சினிமாவில் இருக்காது என கூறப்பட்டு வந்தது.

அதனை பொய்யாக்கும் வகையில் 2023 ஆண்டு தொடக்க நாள் அன்று டாடா படத்தின் தமிழக விநியோக உரிமையை ரெட் ஜெயன்ட் மூவீஸ் பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
red giant releases tata movie

எஸ்.அம்பேத்குமார் ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரித்துள்ள படம் டாடா.

அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில், நடிகர் கவின் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப்படத்தில் நாயகியாக அபர்ணா தாஸ் நடித்திருக்கிறார்.

ADVERTISEMENT

இவர்களோடு கே.பாக்யராஜ், ஐஸ்வர்யா, ஹரிஷ், பிரதீப் ஆண்டனி உட்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்குவதற்கு கடுமையான போட்டி நிலவியது. ஒளிபரப்பு உரிமை தங்களுக்கு வேண்டும் என்று கலைஞர் தொலைக்காட்சி கூறியதால் பிற தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டியில் இருந்து ஒதுங்கிகொண்டனர்.

2023 ஆம் ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு ரெட்ஜெயன்ட் நிறுவனம், இந்தப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையைப் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதோடு இப்படம் 2023 ஜனவரியில் வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஏற்கெனவே எதிர்பார்ப்புக்குரிய படமாக கூறப்பட்டுவரும் சூழலில்  இந்தப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடவிருக்கிறது என்கிற அறிவிப்பு படத்துக்கு மேலும் பலம் சேர்த்திருக்கிறது.

இராமானுஜம்

சென்னையில் ரோப் கார் சேவை : எங்கிருந்து எங்கு?

யூனியன் வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை: சிசிடிவி காட்சிகளை வைத்து தேடுதல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share