விளையாட்டை ஊக்குவிப்பதில் சிறந்த மாநிலம்… தமிழ்நாட்டிற்கு கிடைத்த கவுரவம்!

Published On:

| By Manjula

Udhayanidhi Stalin Received Sports Award

Udhayanidhi Stalin Received Sports Award

விளையாட்டை ஊக்குவிப்பதில் சிறந்த மாநிலம் என்ற விருது தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளது.

விளையாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து, அந்த துறைக்கு மேலும் அதிக கவனம் கிடைத்து வருகிறது.

கிரிக்கெட், கபடி, ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுகள் மற்றும் விளையாட்டு சார்ந்த நிகழ்ச்சிகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.

செஸ் ஒலிம்பியாட்,  கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி ஆகியவற்றை இதற்கு நாம் உதாரணமாக சொல்லலாம்.

Udhayanidhi Stalin Received Sports Award

மேலும் சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடப்பதற்கான முயற்சிகளையும், தமிழ்நாடு அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் விளையாட்டை ஊக்குவிப்பதில் சிறந்த மாநிலம் என்ற பெருமை தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளது. நேற்று (பிப்ரவரி 8) மும்பையில் ‘தி இந்து’ குழுமம் நடத்திய 2024-ம் ஆண்டிற்கான ‘ஸ்போர்ட் ஸ்டார் ஆக்சஸ்’ விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் ‘விளையாட்டை ஊக்குவிப்பதில் சிறந்த மாநிலம்’ விருதை, தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளத்தில், ”விளையாட்டுத்துறையில் தமிழ்நாடு அரசு படைத்து வரும் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக, The Hindu @sportstarweb-ன் 2024 ACES Awards விருது வழங்கும் விழாவில், தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட “Best State for Promotion of Sports’ விருதை மும்பையில் இன்று பெற்றுக் கொண்டோம்.

விளையாட்டுத்துறையில் தமிழ்நாடு மேற்கொண்டு வரும் பணிகளையும், சாதனைகளையும் கூர்ந்து கவனித்து, இந்த சிறப்புக்குரிய விருதை வழங்கியுள்ள, ஸ்போர்ட் ஸ்டார் மற்றும் விருதிற்கான தேர்வுக்குழுவுக்கு எங்கள் அன்பும், நன்றியும்.

தமிழ்நாட்டை இந்திய துணைக் கண்டத்தின் விளையாட்டுத்துறை தலைநகராக உருவாக்கும் நம்முடைய முயற்சிகளுக்கு இந்த விருது நிச்சயம் ஊக்கமளிக்கும்,” என தெரிவித்து இருக்கிறார்.

-மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சன் டிவி தொடர்ந்த வழக்கு: கோர்ட்டில் ஆஜரான திருமாவளவன்

மனைவியை சாடிய தந்தை : கோபத்தில் கொந்தளித்த ஜடேஜா

Udhayanidhi Stalin Received Sports Award

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share