திமுக இளைஞரணியின் மாவட்ட, மாநகர, மாநில நிர்வாகிகள் கூட்டம் மே 25ஆம் தேதி திருச்சியில் 2 மணி நேரம் நடைபெற்றது. Udhayanidhi Open Talk in Trichy
திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் புதுக்கோட்டை கரூர் மாவட்டங்களுக்கு பயணம் செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில்… இந்த நிகழ்ச்சிகளுக்கிடையே திருச்சியை மையமாக வைத்து இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பை நடத்தி விடலாம் என திட்டமிட்டு இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
திருச்சியில் தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற இந்த கூட்டம் காலை 9:30 மணிக்கு தொடங்கப்படும் என இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படியே தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருந்து நிர்வாகிகள் காலை 9 மணிக்கு எல்லாம் அரங்கத்திற்கு வந்துவிட்டனர். Udhayanidhi Open Talk in Trichy

இளைஞர் அணியின் மாநில துணைச் செயலாளர்கள் ஜோயல், இன்பா ரகு, இளையராஜா, ஈரோடு பிரகாஷ் எம் பி, அப்துல் மாலிக், பிரபு கஜேந்திரன் சீனிவாசன், ராஜா, ஆனந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்த இந்தக் கூட்டத்தில் மனம் திறந்தும் ரிலாக்ஸ் ஆகவும் பேசி இருக்கிறார் உதயநிதி. Udhayanidhi Open Talk in Trichy
வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் இளைஞர் அணியை சேர்ந்த அதிகமானோர் போட்டியிட வேண்டும் என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் இளைஞரணி நிர்வாகிகள் உதயநிதியிடம் வலியுறுத்தி இருக்கிறார்கள். Udhayanidhi Open Talk in Trichy
இது போன்ற கூட்டங்களிலும் இளைஞர் அணிக்கு வருகிற சட்டமன்றத் தேர்தலில் அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்று வெளிப்படையாக வேண்டுகோள் வைக்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் பேசிய நெல்லை மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் அலிஃப் மீரான், “திமுகவை தோற்றுவித்த அண்ணா, கலைஞர், தற்போதைய தலைவர் முதல்வர் ஆகியோர் தென் மாவட்டங்களில் போட்டியிடவில்லை என்ற குறை எங்களுக்கு இருக்கிறது.
எனவே இளைஞர் அணி செயலாளர் உதயநிதி வருகிற சட்டமன்றத் தேர்தலில் தென்தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும். அதுவும் குறிப்பாக நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும். கலைஞர் தனிமை சிறையில் அடைக்கப்பட்ட பாளையங்கோட்டையில் உதயநிதி போட்டியிடுவது பொருத்தமாக இருக்கும்” என்று கோரிக்கை வைத்தார். Udhayanidhi Open Talk in Trichy

இதை கேட்டு அரங்கத்தில் பலத்த கரகோஷம் எழுந்தது.
திமுகவில் இப்போது மண்டல பொறுப்பாளர்களில் நெல்லை மாவட்டம் துணை பொதுச் செயலாளர் கனிமொழியின் பொறுப்பில் இருக்கிறது. இந்த நிலையில் அலிஃப் மீரான் ஏன் இப்படி பேசினார் என தனது உதவியாளர் செந்திலிடம் கேட்டிருக்கிறார் உதயநிதி.
உடனடியாக நெல்லை மாவட்ட நிர்வாகிகளிடம் விசாரிக்கப்பட்டு, ‘ நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வஹாப் இப்போது பாளையங்கோட்டை எம்எல்ஏவாக இருக்கிறார். அவருக்கும் மீரானுக்கும் இடையில் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.
சமீபத்தில் பொது மேடையிலேயே அலிஃப் மீரானுக்கும் அப்துல் வஹாபுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் மீண்டும் பாளையங்கோட்டையில் வஹாப் போட்டியிடக் கூடாது என்ற எண்ணத்தில் உங்களை அங்கே போட்டியிட மிக சாமர்த்தியமாக வேண்டுகோள் வைத்து இருக்கிறார்” என்று உதயநிதியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற நிர்வாகிகள் பேசி முடித்த பிறகு நிறைவாக உதயநிதி உரையாற்றினார்.
“எவ்வளவு டென்ஷன்கள் இருந்தாலும் இளைஞர் அணி கூட்டத்துக்கு வந்து விட்டால் மிகவும் மகிழ்ச்சியாக நான் உணர்கிறேன். Udhayanidhi Open Talk in Trichy
கலைஞர் பிறந்தநாள் விழாவை நாம் சிறப்பாக கொண்டாட வேண்டும். ஏற்கனவே நான் கொடுத்த அறிவுறுத்தல்களை சிறப்பாக இளைஞரணி நிர்வாகிகள் செய்து முடித்திருக்கிறீர்கள். ஒவ்வொரு ஒன்றியத்திலும் நூலகம் உள்ளிட்ட பணிகளை சிறப்பாக செய்து வருகிறீர்கள். இந்த வகையில் நமது கலைஞர் பிறந்தநாளை நாம் சிறப்பாக கொண்டாட வேண்டும். தெருமுனை பிரச்சாரங்கள் அதிகமாக செய்ய வேண்டும்.
இங்கு பேசிய அனைவருமே சிறப்பாக பேசினார்கள். ஏற்கனவே என்னை கொங்கு மண்டலத்தில் போட்டியிடும்படி கேட்டனர். இந்த நிலையில் இப்போது நெல்லை மாநகர துணை அமைப்பாளர் அலிஃப் மிரான் நான் பாளையங்கோட்டையில் போட்டியிட வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அவர் அந்த கோரிக்கையை ஏன் வைத்தார் என்று எனக்கு தெரியும். அது உங்களுக்கும் தெரியும்” என்று உதயநிதி சிரித்துக்கொண்டே கூறியதும் விவரம் அறிந்த நெல்லை நிர்வாகிகள் பெரும் குரலெடுத்து சிரித்தனர்.
இதன் பிறகு சீரியசாக பேச ஆரம்பித்தார் உதயநிதி.
“கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறுவதற்கு நம்முடைய இளைஞர் அணியின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அதேபோல 2026 சட்டமன்றத் தேர்தலிலும் நம்முடைய பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருக்க வேண்டும். Udhayanidhi Open Talk in Trichy

நம்முடைய தலைவர் முதலமைச்சர் மிகுந்த நிதி நெருக்கடிகளுக்கு இடையே ஆட்சி நிர்வாகத்தை நடத்தி வருகிறார். நமக்கு கொடுக்கவேண்டிய நியாயமான நிதியைக் கூட டெல்லி தடுத்து நிறுத்துகிறது. இது மட்டுமல்ல… தலைவர் மீதோ என் மீதோ யாரும் எந்த தவறும் கூற முடியாது யாராலும் நம்மை மிரட்டவும் முடியாது.
வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இளைஞர் அணியினருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்.
பல பேர் இப்போதே இந்த தொகுதி வேண்டும் அந்த தொகுதி வேண்டும் என்றெல்லாம் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறீர்கள்.
உங்களுக்கெல்லாம் ஒன்று சொல்கிறேன். வருகிற சட்டமன்றத் தேர்தலில் இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தலைவரிடம் சண்டை போட்டு நான் வாய்ப்புகளை பெறுவேன். Udhayanidhi Open Talk in Trichy
ஆனால், வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறவர்கள் அதற்கான தகுதி உடையவர்களாகவும் இருக்க வேண்டும்.
வேட்பாளராக வேண்டும் என விரும்புகிறவர்கள் பல கட்ட ஆய்வுகளுக்கு பிறகு தான் முடிவு செய்யப்படுவார்கள். பென் டீம் இருக்கிறது. அவர்களைப் போல் இன்னும் பல கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு அதில் நீங்கள் நல்ல பெயர் வாங்கினால்தான் உங்களை தகுதி உடையவர்களாக நிரூபித்தால் தான் வாய்ப்பு கிடைக்கும். அப்போதுதான் நானும் சிபாரிசு செய்ய முடியும்.
எனவே வாய்ப்பு வேண்டும் என்று விரும்புகிறவர்கள் உங்களை தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள்” என்று பேசி முடித்திருக்கிறார் துணை முதலமைச்சரும் இளைஞரணி செயலாளருமான உதயநிதி.
மாநில துணைச் செயலாளாரும் தாட்கோ சேர்மனுமான இளையராஜா நன்றியுரை ஆற்ற கூட்டம் 12.10 மணிக்கு முடிந்தது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர் அணி நிர்வாகிகளிடம் நாம் பேசும்போது, “கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே இளைஞரணி நிர்வாகிகளுக்கு சீட்டு கேட்டு அழுத்தம் கொடுத்தார் உதயநிதி. ஆனால் கொங்கு மண்டலத்தில் ஈரோடு பிரகாஷ் உள்ளிட்ட சிலருக்கு தான் அவரால் வாய்ப்புகள் பெற முடிந்தது. அதுவும் கடுமையான முயற்சிக்குப் பிறகுதான் கிடைத்தது.
இந்த நிலையில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் நான் சொன்னால் சீட்டு கொடுத்து விட மாட்டார்கள் என்பதைத்தான் வெளிப்படையாக இந்த கூட்டத்தில் பேசியிருக்கிறார் உதயநிதி.
பென் டீம் என்ற வார்த்தையை உச்சரித்த உதயநிதி, அவர்களது ஆய்வுகளுக்கு உட்பட்டு அதில் நல்ல பெயர் எடுத்தால் தான் தன்னாலும் சிபாரிசு செய்ய முடியும் என்பதை கூறியிருக்கிறார். வருகிற சட்டமன்றத் தேர்தலில் யாரும் எளிதில் சிபாரிசு செய்து சீட்டு வாங்க முடியாது என்பதை தான் உதயநிதியின் இந்த பேச்சு உணர்த்துகிறது” என்கிறார்கள் இளைஞரணி நிர்வாகிகள்.