தொற்று நோய் தடுக்க மருத்துவ முகாம்.. உதயநிதி ஆய்வு!

Published On:

| By Minnambalam Login1

udhayanidhi inspects medical camps

சென்னையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்த நிலையில், தொற்று நோய் பரவாமல் இருக்க அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம்களைத் துணை முதலமைச்சர் உதயநிதி இன்று(அக்டோபர் 16) ஆய்வு செய்தார்.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகவே, கனமழை பெய்து வந்தது.

மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று(அக்டோபர் 16) அதி கனமழை பெய்யும், அதாவது ‘ரெட் அலர்ட்’ விடப்பட்டிருந்தது.

ஆனால் அனைவரும் எதிர்பார்த்தபடி இன்று கனமழை பெய்யவில்லை. இந்த நிலையில், மழைக் காலத்தில் தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்காக, சென்னையின் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சூழ்நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கத்தில் உள்ள மருத்துவ முகாம் ஒன்றை இன்று காலை ஆய்வு செய்தார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் இன்று “வடகிழக்கு பருவமழை நேரத்தில் தொற்றுநோய் பரவாமல் தடுக்கும் வகையில் முதலமைச்சரின் உத்தரவின் பேரில், பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில்,  டிரிப்ளிகேன் தொகுதி, வீ.ஆர். தெரு பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்று வரும் மருத்துவ முகாமினை இன்று ஆய்வு செய்தோம்.

மேலும், பொதுமக்களுக்காக உணவு தயார் செய்யப்படும் இடத்துக்குச் சென்று அங்கு உணவு தயாராகின்ற விதம் குறித்துக் கேட்டறிந்தோம். மருத்துவ முகாமிற்கு வருகை தந்திருந்த மக்களுடன் கலந்துரையாடி அவர்களுடைய கோரிக்கைகளையும் பெற்றோம். மழை நேரத்தில் கவனமுடனும் – பொறுப்புடனும் செயல்படுமாறு கேட்டுக் கொண்டோம்” என்று பதிவிட்டுள்ளார்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

மன்னரான அஜய் ஜடேஜா: உயர்ந்த சொத்து மதிப்பு!

நடிகர் அர்ஜுன் இயக்கத்தில் புதிய படம்!

வெள்ளை அறிக்கை கேட்ட எடப்பாடி… உதயநிதி பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share