கெஜ்ரிவால் பாஜகவில் இணைந்தால் புனிதர்: உத்தவ் தாக்கரே பேச்சு!

Published On:

| By Selvam

ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை கண்டித்து டெல்லி ராம் லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று (மார்ச் 31) பேரணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முஃப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் உள்ளிட்ட தலைவர்களும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா, ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே பேசும்போது, “நாடாளுமன்ற தேர்தலில் 400 இடங்களை தாண்ட வேண்டும் என்பதே தற்போது பாஜவின் கனவாக உள்ளது. தேர்தல் பிரச்சாரத்திற்காக நாங்கள் இங்கு வரவில்லை, ஜனநாயகத்தை பாதுகாக்க வந்துள்ளோம்.

ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியவர்கள் பாஜகவில் இணைந்ததும் புனிதராகி விடுகிறார்கள். அவர்களை வாஷிங் மிஷினில் கழுவி சுத்தம் செய்கின்றனர். கெஜ்ரிவால் பாஜகவில் இணைந்தால் புனிதராகியிருப்பார். ஊழல்வாதிகள் நிறைந்த கட்சியால் எப்படி ஆட்சியை நடத்த முடியும்? இந்த பேரணியை குண்டர் கூட்டம் என்று பாஜக விமர்சித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு, நம் நாடு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா என்ற ஒரு பயம் இருந்தது, ஆனால், இப்போது அது பயம் அல்ல, உண்மை என்று தெரிகிறது.

அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டால் மக்கள் பயப்படுவார்கள் என்று பாஜக அரசு நினைக்கிறார்கள். இந்திய மக்கள் பயப்பட வேண்டியவர்கள் அல்ல, அவர்களுக்கு எப்படி போராடுவது என்பது­­ தெரியும்”, என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

புதுச்சேரியில் பரிதாபம்: சுவர் இடிந்து விழுந்து மூவர் பலி!

Aadujeevitham: படைத்த புதிய சாதனை… யாராலும் தடுக்க முடியாது போல!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share