ஒரே நாளில் பிரதமர் மோடி, ராகுலை சந்தித்த உதயநிதி : டெல்லியில் நடந்தது என்ன?

Published On:

| By Kavi

Udayanidhi met Modi Rahul gandhi

இன்று டெல்லி சென்ற அமைச்சர் உதயநிதி, பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரைச் சந்தித்தார். Udayanidhi met Modi Rahul gandhi

தமிழ்நாட்டில் ஜனவரி 19ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை கேலோ இந்தியா விளையாட்டு போட்டி நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்க தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

ADVERTISEMENT

இன்று (ஜனவரி 4) பிற்பகல் பிரதமர் இல்லத்துக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி.

அப்போது கேலோ இந்தியா தொடக்க போட்டியில் கலந்துகொள்ள வருமாறு அழைப்பிதழை வழங்கினார்.

ADVERTISEMENT

இந்த சந்திப்பு குறித்தான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள அமைச்சர் உதயநிதி, “ஜனவரி 19ஆம் தேதி தொடங்கும் கேலோ இந்தியா போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருமாறு பிரதமருக்கு அழைப்பு விடுத்ததில் மகிழ்ச்சி.

இந்த சந்திப்பின் போது, தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மறுசீரமைப்புக்காகவும், அந்த பகுதி மக்களின் மறுவாழ்வுக்கான பணிகளை மேற்கொள்ளவும் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக நிதி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

ADVERTISEMENT

தொடர்ந்து தமிழகத்தின் பொது முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்தும், குறிப்பாக விளையாட்டு துறையின் வளர்ச்சி குறித்தும் கலந்துரையாடினோம்.

2023ஆம் ஆண்டின் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு மற்றும் ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியை வெற்றிகரமாக நடத்தியதைக் குறிக்கும் காபி டேபிள் புத்தகத்தையும் பிரதமரிடம் வழங்கினேன்” என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமருடனான சந்திப்பை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்துக்கு சென்றார். அங்கு காங்கிரஸ்  தலைவர்கள் சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி, “பிரதமர் கேலோ இந்தியா தொடக்க நிகழ்ச்சிக்கு வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார்” என்றார்.

சோனியா காந்தி, ராகுல் காந்தி வருகிறேன் என்று சொன்னார்களா?

“இல்லை. அவர்கள் சொல்லவில்லை. ராகுல் காந்தி பாதயாத்திரைக்கு செல்கிறார்” .

ராகுல் காந்தி அரசியல் பற்றி பேசினாரா?. நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது. இன்று ஆலோசனை செய்திருக்கிறார்கள்? இதை பற்றி எதாவது பேசினாரா?

“அதை பற்றி பேசினார். ஆனால் இப்போது அதை பற்றி சொல்ல முடியாது. பாத யாத்திரை தொடங்க இருப்பதாக சொன்னார். மற்றப்படி ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக்கொண்டோம்.”

இவ்வாறு பதிலளித்தார் உதயநிதி ஸ்டாலின்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

தமிழக நிதி – வாங்கியதை விட கொடுத்தது அதிகம் : புள்ளி விவரங்களோடு சொன்ன நிர்மலா சீதாராமன்

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ வாழ்க்கை வரலாறு படம்!

நிர்மலா சீதாராமன் தன்னை பிரதமராக நினைத்து கொள்கிறார்: திருமாவளவன்

Udayanidhi met Modi Rahul gandhi

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share