வடசென்னை மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 2) பிரச்சாரம் மேற்கொண்டார்.
முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் சொந்த தொகுதியான கொளத்தூரில் திறந்த வேனில் நின்றபடி அவர் வாக்கு சேகரித்தார்.
உதயநிதி பேசுகையில், “மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தற்போது 1 கோடியே 17 லட்சம் மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதற்காக விண்ணப்பித்துள்ள மேலும் 40 லட்சம் மகளிருக்கும் விரைவில் பணம் வழங்கப்படும். அதற்கு நான் வாக்குறுதி அளிக்கிறேன்.
திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கலாநிதி வீராசாமியை 6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதுமட்டுமல்ல கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யாத மோடியின் பாஜக கட்சியை நீங்கள் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். இங்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெற கூடாது.
அதோடு தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் மத்திய பாஜக அரசிடம் அடகு வைத்த எடப்பாடி பழனிசாமியின் அதிமுகவையும் நீங்கள் தோற்கடிக்க வேண்டும்” என்று அவர் பேசினார்.
தொடர்ந்து வட சென்னை தொகுதிக்கான வாக்குறுதியாக விம்கோ நகர் – எண்ணூர் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படும், வடசென்னையில் பிரத்யேகமாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அமைக்கப்படும், வட சென்னை கணேசபுரத்தில் ரயில்வே மேம்பால பணிகள் விரைவில் முடிக்கப்படும் என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மணல் கொள்ளை வழக்கு: மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக உத்தரவு!
“தயாராக இருங்கள்” : மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்… எச்சரித்த உச்சநீதிமன்றம்!