சென்னை விமான நிலையத்தில் 10 ரூபாய்க்கு டீ.. ரூ.20க்கு என்னென்ன வாங்கலாம் தெரியுமா?

Published On:

| By Kumaresan M

பொதுவாகவே விமான நிலையங்களுக்கு சென்றால், அங்கிருக்கும் ஹோட்டல்களில் சாதாரணமாக டீ, காஃபி விலை கூட விலை அதிகமாக இருக்கும். ஒரு டீ, காஃபி ரூ.100 வரையிலும், தோசை, இட்லி, ரூ.200 முதல் 300 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், சாதாரண பயணிகள் பயன் பெறும் வகையில், சென்னை விமான நிலையத்தில் ‘உடான் யாத்ரீ கஃபே’ (Udaan Yatri Cafe) என்ற சிற்றுண்டி கடையை மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு திறந்து வைத்தார். udan yatri cafe in chennai airport

கடந்தாண்டு டிசம்பர் மாதம் கொல்கத்தா விமான நிலையத்தில் முதன்முறையாக ‘உடான் யாத்ரி கஃபே’ திறந்து வைக்கப்பட்டது. இதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டது.

தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் உடான் யாத்ரி கஃபே திறந்து வைக்கப்பட்டுள்ளது. இங்கு ரூ.10-க்கு தண்ணீர் பாட்டில், 10 ரூபாய்க்கு டீ, 20 ரூபாய்க்கு காஃபி, சமோசா, வடை உள்ளிட்டவையும் கிடைக்கும். udan yatri cafe in chennai airport

இந்த கடையை திறந்து வைத்த பிறகு, விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறுகையில், ‘நாட்டின் கிழக்கு நுழைவு வாயிலில் இந்த கடை முதன்முறையாக திறக்கப்பட்டது. அடுத்து தெற்கு நுழைவு வாயிலில் திறக்கப்பட்டுள்ளது. விரைவில் டெல்லி விமான நிலையத்திலும் இந்த சிற்றுண்டி கடை திறக்கப்படும். இதுவெல்லாம், பிரதமர் மோடியின் தொலை நோக்கு பார்வையை காட்டுகிறது’ என்றார்.

சென்னை விமான நிலையம் ஆண்டுக்கு 2.2 கோடி பயணிகளை கையாள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share