19 வயது இந்திய அணியில் 13 வயது குட்டீஸ்… யாரப்பா இந்த கில்லி?

Published On:

| By Kumaresan M

ஆசியக் கோப்பை தொடர் வரும் நவம்பர் 29-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. இதற்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்த அணிக்கு  முகமது அமான் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணைக் கேப்டனாக கிரண் சோர்மலே பணியாற்ற போகிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே ஆஸ்திரேலியா யு19 அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய  அணிக்கு தலைமை தாங்கினர்.

ADVERTISEMENT

இந்திய அணியில்  13 வயதாகும் பிகாரைச் சேர்ந்த சிறுவனான வைபவ் சூர்யவன்ஷியும் தேர்வாகியுள்ளார்.  இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியா 19 அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி 3 இன்னிங்ஸ்களில் விளையாடி 108 ரன்களை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இதில், ஒரு அரை சதமும் அடக்கம். சர்வதேச கிரிக்கெட்டில் சதமடித்த இளம் வீரர் என்ற பெருமையும் சூரியவன்சிக்கு கிடைத்தது. முன்னதாக இந்த சாதனை வங்கதேச 19 வயது அணி கேப்டன் நஜ்முல் ஹூசைனிடம் இருந்தது.

இதனால் பலரும் வைபவ் சூர்யவன்ஷிக்கு பாராட்டு தெரிவித்திருந்தனர் ஆசியக் கோப்பையில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அடுத்து வரும் யு19 உலகக்கோப்பை அணியிலும் இவர் இடம் பிடிக்க முடியும்.

ADVERTISEMENT

பிகார் அணிக்காக இவர் ரஞ்சி டிராபியில் களம் இறங்கிய போது, இவருக்கு வயது 12 ஆண்டுகள் 284 நாட்கள்தான் ஆகியிருந்தது. உலகில் முதல் தர கிரிக்கெட் போட்டியில் விளையாடும் 8வது இளம் வீரராக இவர் கருதப்படுகிறார்.

9 வயதில் இருந்து இவர் கிரிக்கெட் விளையாடி வருகிறார். 10 வயதில் இருந்தே சீனியர் வீரர்களுடன் இவர் விளையாட ஆரம்பித்து விட்டார். இவரின், தந்தை சஞ்சீவ் கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இதனால், தன் மகனுக்கு முறையான பயிற்சி கொடுத்து சிறந்த வீரராக மாற்ற முயன்று வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 கங்குவா : விமர்சனம்

உதயநிதி உடை விவகாரம் : புதிய மனுக்களை விசாரிக்க மறுப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share