18 வயதுக்குப்பட்டோருக்கான உலக ஜூடோ கேடட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஜூடோ வீராங்கனை லிந்தோய் சனம்பம் தங்க பதக்கம் வென்றார்.
சரஜெவோ, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா நாடுகளில் யு18 உலக ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆகஸ்ட் 24 முதல் 27 வரை நடைபெற்றது.
இதில் 60 நாடுகளிலிருந்து 483 ஜூடோ வீரர்கள் கலந்து கொண்டனர்.

இறுதிப் போட்டியில் பெண்கள் 57 கிலோ எடைப் பிரிவில் இன்று (ஆகஸ்டு 27) இந்திய ஜூடோ வீராங்கனை லிந்தோய் சனம்பம் பிரேசிலின் பியான்கா ரெய்ஸை எதிர்கொண்டார்.
போட்டியின் இறுதியில் லிந்தோய் 1-0 என்ற கணக்கில் பியான்காவை வீழ்த்தி தங்கம் வென்றார்.
நடப்பு ஆசிய சாம்பியனான லிந்தோய், 2017 தேசிய சப்-ஜூனியர் ஜூடோ சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றிருந்தார்.
தற்போது உலக ஜூடோ சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியராகத் திகழ்கிறார்.
மோனிஷா