ராஜேந்திர பாலாஜி மீது மநீம போலீசில் புகார்!

Published On:

| By Balaji

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை ஆணையர் அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12ஆம் தேதி அரவக்குறிச்சி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து. அவன் பெயர் கோட்சே என்று கூறியிருந்தார். இதற்கு பாஜக எதிர்ப்புத் தெரிவித்தது. கமல் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் அவருக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

ADVERTISEMENT

இதற்கிடையே கமல் நாக்கு அறுக்கப்படும் என்று பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதற்கு அரசியல் கட்சிகள் மத்தியில் கண்டனங்கள் குவிந்தன. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் நீதி மய்யம் சார்பில் கடலூர், புதுக்கோட்டை, திருச்சி, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது மக்கள் நீதி மையம். இந்த நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று (மே 20) கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன், பொதுச் செயலாளர் அருணாசலம் ஆகியோர் சென்னை காவல் ஆணையரகத்தில் மனு அளித்துள்ளனர்.

அதில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு (இந்து) எதிராகப் பேசியதாகப் பொய்யாக, தீய பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். தீவிரவாதம் எந்த வடிவில் இருந்தாலும், எந்த மதத்தில் இருந்தாலும் அதை எங்கள் தலைவர் ஏற்க மாட்டார். ஒற்றுமையே இந்த நாட்டின் பலம், அனைத்துத் தரப்பு மக்களும் கூடி வாழ வேண்டும் என்றும் பேசுபவர். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கமல்ஹாசன் குறித்து தீய பிரச்சாரத்தை மட்டும் மேற்கொள்ளவில்லை. காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சே இந்து தீவிரவாதி என்று கமல்ஹாசன் கூறியதற்கு, அவரது நாக்கை அறுப்பேன் என்று தொலைக்காட்சிகளின் வழியாகவும், சமூக தளங்களின் வழியாகவும் வெளிப்படையான அச்சுறுத்தல் விடுக்கிறார்” என்று கூறியுள்ளனர்.

ADVERTISEMENT

மேலும், “அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இத்தகைய பேச்சுகளால் தூண்டப்பட்ட சிலர் கொடூரமான காயங்களை ஏற்படுத்தும் முயற்சியுடன், அரவக்குறிச்சி வேலாயுதம்பாளையத்தில் கமல்ஹாசனைத் தாக்க முயன்றனர். அவர்கள் மீது கரூர், மாவட்டக் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அமைச்சர் தூண்டுதலால்தான் இத்தகைய செயல்களில் ஈடுபட்டுள்ளனர். ராஜேந்திர பாலாஜி தொடர்ச்சியாக இவ்வாறு பேசி வருவதற்கு 19ஆம் தேதி சன் நியூஸ் தொலைக்காட்சியில் வெளியான அவரது பேட்டியும் ஆதாரமாக உள்ளது. ஐஎஸ்ஐஎஸ் எங்களுக்கு நிதியுதவி அளிப்பதாக அடிப்படையற்ற குற்றச்சாட்டை அவர் முன்வைத்துள்ளார். இவையெல்லாம் கமல்ஹாசன் மீது மக்களிடம் மதத்தின் பெயரால் பகைமையை உருவாக்கும் முயற்சி. எனவே ராஜேந்திர பாலாஜி மீது 107, 120ஏ, 153 ஏ, 503, 504, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.

.

ADVERTISEMENT

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு அமித் ஷா தூது!](https://minnambalam.com/k/2019/05/20/82)

**

.

**

[அதிமுக: கட்சிப் பொறுப்பிலிருந்து விலகிய தோப்பு வெங்கடாசலம்](https://minnambalam.com/k/2019/05/20/57)

**

.

.

**

[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://minnambalam.com/k/2019/05/20/16)

**

.

**

[வாக்குக் கணிப்பும் மக்கள் முடிவும்: தேர்தல் வரலாறு சொல்வது என்ன?](https://minnambalam.com/k/2019/05/20/18)

**

.

**

[தமிழகம்: திமுக கூட்டணிக்கே சாதகம்!](https://minnambalam.com/k/2019/05/20/20)

**

.


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share