uமறுவாக்குப்பதிவு : தேர்தல் ஆணையத்தில் பாஜக!

Published On:

| By Balaji

7ஆம் கட்ட மக்களவைத் தேர்தலின் போது வன்முறை நடந்த இடங்களில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த தேர்தலின் போது பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. குறிப்பாக மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கும் திருணமூல் காங்கிரஸுக்கும் இடையே மோதல்கள் அதிகரித்தன. மேற்கு வங்கத்தில் அமித் ஷா பேரணியில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து நேற்று நடைபெற்ற 7ஆம் கட்ட தேர்தலிலும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ராகுல் சின்ஹா, நிலஞ்சன் ராய், அனுபம் ஹஸ்ரா உள்ளிட்ட பாஜக வேட்பாளர்களின் வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் மேற்கு வங்கம் உள்ளிட்ட வன்முறை நடைபெற்ற தொகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்துள்ளது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் உள்ளிட்டோர் தலைமையிலான குழு தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பியூஸ் கோயல், “தேர்தல் ஆணையரைச் சந்தித்துவிட்டு வருகிறோம். பாஜக தொண்டர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை குறித்த முழுமையான தகவலைக் கொடுத்துள்ளோம். தேர்தலின் போது வன்முறை நடந்த தொகுதிகளில் மீண்டும் வாக்குப்பதிவு கோரியுள்ளோம். குறிப்பாக மேற்கு வங்கத்தில் மீண்டும் நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்” என்றார். “மத்திய படை பாதுகாப்புடன், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறைகளில் வைக்க வேண்டும். ஒடிசா, மேற்கு வங்கம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு சிறப்பு மேற்பார்வையாளர்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தப்பட்டது” என்று பியூஸ் கோயல் தெரிவித்தார்.

”இப்போதும், வாக்கு எண்ணிக்கைக்குப் பின்பும் மேற்கு வங்கத்தில் வன்முறை நடக்கலாம் என்று எண்ணுகிறோம். எனவே தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வரை மத்திய பாதுகாப்புப் படையை மாநிலத்தில் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்ததாக” பியூஸ் கோயல் குறிப்பிட்டார்.

முன்னதாக, கருத்துக்கணிப்புகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய, இயந்திரங்களை மாற்றச் சூழ்ச்சி நடப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

.**

மேலும் படிக்க

**

.

**

[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://minnambalam.com/k/2019/05/20/16)

**

.

**

[வாக்குக் கணிப்பும் மக்கள் முடிவும்: தேர்தல் வரலாறு சொல்வது என்ன?](https://minnambalam.com/k/2019/05/20/18)

**

.

**

[தமிழகம்: திமுக கூட்டணிக்கே சாதகம்!](https://minnambalam.com/k/2019/05/20/20)

**

.

**

[அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?](https://minnambalam.com/k/2019/05/19/37)

**

.

**

[ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!](https://minnambalam.com/k/2019/05/19/38)

**

.

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share