தினப் பெட்டகம் – 10 (06.11.2018)
நிணநீர் அமைப்பு (lymphatic system) பற்றி:
1. நம் உடலிலுள்ள ஒவ்வொரு திசுவிலும் ரத்தம் போல, நிணநீர் (lymph) ஓடிக்கொண்டிருக்கும். இவைக்கெனத் தனியான நரம்புகள் உடலெங்கும் செல்கின்றன.
2. நம் உடலில் மொத்தம் 600 நிணநீர் முடிச்சுகள் (lymph nodes) உள்ளன.
3. உடலில் ஏதேனும் கிருமிகள் நுழைந்தாலோ, ஏதேனும் infection ஆனாலோ, இந்த முடிச்சுகள் வீங்கிவிடும்.
4. தொண்டையில் சில நேரங்கள் வலியும் வீக்கமும் ஏற்படும். Infection காரணமாக ஏற்படும் இந்த வீக்கம், நம் glandகளில் ஏற்படுகிறது என்று நினைப்போம். ஆனால் அவை நிணநீர் முடிச்சுகளில் ஏற்படும் வீக்கங்களே.
5. தொண்டை தவிர, தாடைக்குக் கீழ், அக்குளில் என வேறு சில பகுதிகளிலும் இந்த வீக்கத்தை உணர முடியும்.
6. lymphadenitis எனும் ஒரு நிலை காரணமாகவும், இந்த நிணநீர் முடிச்சுகளில் வீக்கம் ஏற்படலாம்.
7. நம் உடலில் வைரஸ்களையும், தொற்றுகளையும் அழிப்பதில் நிணநீர் அமைப்பு (lymphatic system) மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
8. நிணநீர் முடிச்சுகள், மிகவும் சிறியதாக, பட்டாணி அளவில்தான் இருக்கும்.
9. இம்மாதிரியான குட்டிக் குட்டி முடிச்சுகள், நூற்றுக்கணக்கில் நம் உடலெங்கும் விரவிக் கிடக்கின்றன.
10. ரத்தத்தை நம் உடலெங்கும் தொடர்ந்து செலுத்திக்கொண்டிருக்க இதயம் இடையறாது உழைக்கிறது. ஆனால், நிணநீர் நம் உடலெங்கும் செல்வதற்கு, புவியீர்ப்பு விசை மற்றும் மிதமான அழுத்தங்களே காரணமாக இருக்கின்றன.
**- ஆஸிஃபா**