ஜப்பான் நிலநடுக்கம் – பிரதமர் மோடி வருத்தம்

Published On:

| By Balaji

ஜப்பானில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இன்று அதிகாலையிலும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 7.3 ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவானது.

இதையடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சுமார் 650-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும், 32 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். அவர், ‘ஜப்பானில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேதம் மனஉளைச்சல் தருகிறது. நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களையும், காயம் அடைந்தவர்கள் விரைவில் நலம்பெற எனது பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share