ADVERTISEMENT

குத்துச்சண்டையில் இந்தியாவுக்குத் தங்கம்!

Published On:

| By Balaji

இந்தியக் குத்துச்சண்டை வீரர் ஷியாம் குமார் (49 கி.கி), தாய்லாந்து நாட்டிலுள்ள, பாங்காக்கில் நடக்கும் சர்வதேசக் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றார்.

இவர், கடந்த 2015ஆம் ஆண்டு இவ்வமைப்பு நடத்திய போட்டியில் தங்கம் வென்றவரும், ஒலிம்பிக் சாம்பியனுமான ஹசன்பாய் தஸ்மதாவ் வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறார். இந்தப் போட்டியில் பதக்கம் பெறும் இரண்டாவது இந்தியர் ஷியாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

முன்னதாக, 2015ஆம் ஆண்டு இவ்வமைப்பு நடத்திய போட்டியில் ரோஹித் டோகாஸ் கடைசி செட்டில் தோல்வியுற்று, வெண்கலப்பதக்கம் பெற்றார். அதே ரோஹித் டோகாஸ் (64 கி.கி), இதே போட்டியில் கலந்துகொண்டு மீண்டும் வெண்கலம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share