‘விசாரணை’ படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் புதிய படமான ‘வடசென்னை’ இன்று பூஜை போடப்பட்டது. இப்படத்தின் அறிவிப்புகள் முன்னரே வெளியிடப்பட்டும், படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது புதிராகவே இருந்துவந்தது. காரணம், பிரபு சாலமோன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் தொடரி மற்றும் அவரின் ஹாலிவுட் கமிட்மெண்ட் ஆகியவற்றால் இந்தப் படம் தொடங்கப்படும் என்ற நம்பிக்கையே இல்லாதநிலை இருந்தது. இந்நிலையில், இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.
வடசென்னை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவிருக்கிறார். டேனியல் பாலாஜி, சமுத்திரக்கனி ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் உருவாகும் படம் என்பதாலும், தனுஷ் -டேனியல் பாலாஜி கூட்டணியாலும் இப்படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இப்படத்தின் மற்ற கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
