இந்தியாவின் மிக நீளமான சுரங்கப்பாதை தயார்!

Published On:

| By Balaji

காஷ்மீர் மாநிலம் ஜம்மு- ஶ்ரீநகர் இடையே, நடைபெற்ற நாட்டின் நீளமான இரட்டை சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. இதை பிரதமர் மோடி விரைவில் தொடங்கி வைக்க இருக்கிறார்.

ஜம்மு – ஶ்ரீநகர் இடையில் உள்ள 286 கி.மீ தூரத்துக்கு 4 வழிப்பாதை அமைக்கும் பணி 3720 கோடி ரூபாய் மதிப்பில், 2011-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இப்பணி செய்கையில் இடையில் மலைப்பாதை ஒன்று குறுக்கிடவும், அந்த மலைப்பகுதிக்கு இடையே இருக்கும் 9.2 கி.மீ தூரத்துக்கு மலையைக் குடைந்து, இரட்டை சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணியைத் திட்டமிட்டது இந்திய அரசு.

ADVERTISEMENT

கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் 23-ம் தேதி துவங்கிய, இப்பணி தற்போது சிறப்பான முறையில் நிறைவுற்று, சோதனை ஓட்டமும் நிறைவடைந்துள்ளது.

இந்த சுரங்க பாதையில் கட்டுப்பாட்டு அறை, அவசர காலத்தில் தொடர்புகொள்ளும் நவீன சாதனங்கள், தீயணைப்பு வசதிகள் , மொபைல் நெட்வொர்க் வசதிகள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இந்த சுரங்கப்பாதை மூலம் 41 கி.மீ சுற்றிசெல்லும் தற்போதைய போக்குவரத்து நடைமுறை, 9.2 கி.மீட்டராக குறைந்துள்ளது. மேலும் இவ்வழியில் எரிபொருள் டேங்கர் லாரிகள், அனுமதிக்கப்படுவதில்லையாம்.

இதை கூடியவிரைவில் பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share