குழந்தைகளுக்கான நொறுக்குத்தீனி பாக்கெட்டுகளில் உலோகத் துண்டுகள்: அதிர்ச்சியில் மக்கள்!

Published On:

| By Monisha

Tyson Recalls 13 tonnes of chicken nuggets

குழந்தைகளுக்கான நொறுக்குத்தீனி பாக்கெட்டுகளில் உலோகத் துண்டுகள் இருந்ததையடுத்து நாடு முழுவதும் அவற்றை வாங்கிப் பயன்படுத்தும் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் அர்கன்ஸாஸ் (Arkansas) மாநிலத்தை மையமாக கொண்டு இயங்குவது, குழந்தைகளுக்கான உணவு தயாரிப்பு நிறுவனமான டைசன் ஃபுட்ஸ் (Tyson Foods). இது அசைவ உணவு தயாரிப்பில் உலகளவில் பிரபலமான பன்னாட்டு நிறுவனம்.

இவர்களின் தயாரிப்புகளில் ‘ஃபன் நக்கெட்ஸ்’ (Fun Nuggets) எனப்படும் குழந்தைகளுக்கான நொறுக்குத்தீனி பாக்கெட்டுகளை குழந்தைகள் விரும்பி வாங்குவதுண்டு.

குழந்தைகளுக்குப் பிடித்தமான ‘டைனோஸர்’ வடிவத்தில் சிக்கன் மற்றும் பிரெட் தூள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த தின்பண்டங்கள் அதன் தனிப்பட்ட சுவைக்காக பிரபலமானது.

இந்நிறுவனம் சில நாட்களுக்கு முன் ‘2024 செப்டம்பர் 4’ எனும் தேதியை காலாவதியாகும் தேதியாக குறிப்பிட்டு சுமார் ஒரு கிலோகிராம் (29 அவுன்ஸ்) எடையுள்ள பல்லாயிரக்கணக்கான பாக்கெட்டுகளை அந்நாட்டின் சுமார் ஒன்பது மாநிலங்கள் முழுவதும் கடைகளில் விற்பனைக்கு அனுப்பியிருந்தது.

Tyson Recalls 13 tonnes of chicken nuggets

நாடு முழுவதும் இவற்றை விலைக்கு வாங்கிய பலர் அந்த பாக்கெட்டுகளில் சிறு உலோகத் துண்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இச்செய்தி இணையத்திலும் வைரலானது. இதையடுத்து அந்நிறுவனம் தானாகவே முன் வந்து அனைத்து கடைகளிலும் உள்ள ஃபன் நக்கெட்ஸ் பாக்கெட்டுகளைத் திரும்ப பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது.

‘முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களின் உடல் ஆரோக்கியம் கருதி இந்த முடிவை எடுத்துள்ளோம். முன்னரே இவற்றை வாங்கி வீட்டில் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அவற்றை பயன்படுத்தாமல் போட்டுவிடவும்.

இல்லையென்றால் கடைகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளவும். மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்’ என அந்நிறுவனம் இதுகுறித்து தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தியை அமெரிக்காவின் உணவு பாதுகாப்பு மற்றும் ஆய்வு துறையும் உறுதிபடுத்தியுள்ளது.

இந்த உலோக துண்டுகளால் ஒரே ஒரு வாடிக்கையாளர் மட்டுமே தனது வாயில் காயம் ஏற்பட்டதாக புகார் அளித்துள்ளதாக இந்த துறை அறிவித்திருக்கிறது.

இந்தியாவிலும் குழந்தைகளுக்கு பாக்கெட்டில் விற்கும் தின்பண்டங்களை அதிக அளவில் பெற்றோர் வாங்கி தருகின்றனர். அதனால் பெற்றோர் அவற்றின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும் என சமூக வலைதளங்களில் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜ்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

உலகக்கோப்பையில் இருந்து இலங்கையை வெளியேற்றிய வங்கதேசம்!!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share