உங்களுடைய பிஎப் கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் உள்ளது என்பதைப் பார்க்க ஈசி வழி.. பாஸ்புக் டவுண்ட்லோடு பண்ணலாம்.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் உறுப்பினர்களுக்கு ஆன்லைன் பாஸ்புக் வசதியை வழங்குகிறது. உங்கள் கணக்கு இருப்பை சரிபார்க்க, உங்கள் UAN பாஸ்புக்கை பதிவிறக்கம் செய்யலாம். இதற்காக நீங்கள் எங்கும் அலைய வேண்டிய சிரமம் இல்லை. உங்கள் வீட்டிலிருந்தே ஆன்லைனில் இதை சரிபார்க்கலாம். இதனால், உங்கள் UAN பாஸ்புக்கை பெற அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
இருப்பினும், உங்கள் கணக்கு செயலில் இருந்தால் மட்டுமே உங்கள் UAN பாஸ் புக்கை சரிபார்க்க முடியும். நீங்கள் ஒரு புதிய வேலையில் சேர்ந்திருந்தால் புதிய பங்களிப்பாளரின் கணக்கு செயல்பட சிறிது காலம் ஆகலாம். PF கணக்கு மூடப்பட்டவர்கள் தங்கள் PF பாஸ்புக்கை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.
போர்ட்டல் மூலம் பாஸ்புக்கை பதிவிறக்கம் செய்வது எப்படி?
UAN பாஸ்புக்கை பதிவிறக்கம் செய்ய முதலில் EPFO இன் அதிகாரப்பூர்வ போர்ட்டலுக்கு செல்லுங்கள்.
உங்கள் UAN மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழைய வேண்டும்.
உங்கள் UAN செயலில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அது ஏற்கனவே இல்லையென்றால், முதலில் EPFO இணையதளம் மூலம் அதை செயல்படுத்தவும்.
நீங்கள் வேலை செய்த அனைத்து நிறுவனங்களின் ஐடிகளும் உங்கள் திரையில் தோன்றும்.
அதில் நீங்கள் பாஸ் புக்கை பதிவிறக்கம் செய்ய விரும்பும் ஐடியை தேர்ந்தெடுக்கவும்.
இதற்குப் பிறகு, உங்கள் EPF பாஸ்புக்கை PDF வடிவத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும்.
உமாங் செயலி மூலம் பதிவிறக்கம் செய்வது எப்படி?
முதலில், நீங்கள் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோர் தளத்தில் இருந்து Umang செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பின்னர், ஒரு கணக்கை உருவாக்கி உங்கள் மொபைல் எண்ணுடன் உள்நுழையவும்.
இப்போது, Umang செயலியின் தேடல் பெட்டியில் EPFO என்று டைப் செய்து தேடுங்கள்.
பின்னர், Employee Centric Services என்பதற்கு செல்லவும்.
View Passbook விருப்பத்தை கிளிக் செய்யவும்.
இதற்குப் பிறகு, உங்கள் UAN எண்ணை டைப் செய்யவும்.
சரிபார்ப்பு செயல்முறையை முடிக்க உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிடவும்.
உங்கள் ஐடியை தேர்ந்தெடுத்த பிறகு, உங்கள் பாஸ்புக் தோன்றும். அதை PDF ஆக பதிவிறக்கம் செய்யலாம்.
