பிரபல சமூக வலைதளமான ட்விட்டருக்கு போட்டியாக நேற்று (ஜூலை 6) மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் த்ரெட்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும், இன்ஸ்டாகிராம் த்ரெட்ஸ் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே நாளில் 30 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இணைந்துள்ளனர் என்று மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் த்ரெட்ஸ் செயலியின் மீது ட்விட்டர் நிறுவன சிஇஓ எலான் மஸ்க் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு ட்விட்டர் நிறுவன வழக்கறிஞர் அலெக்ஸ் ஸ்பிரே நேற்று (ஜூலை 6) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், ட்விட்டரின் ரகசியங்களை அறிந்த முன்னாள் ட்விட்டர் நிர்வாகிகளின் மூலம் தங்களின் தகவல்களை திருடி திரெட்ஸ் செயலியை உருவாக்கி இருப்பதாகவும், இதனை மெட்டா நிறுவனம் கைவிடவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது ட்விட்டர் நிறுவனம்.
ஆனால் த்ரெட்ஸில் ட்விட்டரின் முன்னாள் நிர்வாகிகள் யாரும் பணியாற்றவில்லை என்று மெட்டா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஆண்டி ஸ்டோன் பதிலளித்துள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
