‘எக்ஸ்’ ஆக மாறும் ட்விட்டர்: எலான் மஸ்க் அதிரடி!

Published On:

| By Jegadeesh

Twitter becomes 'X' Elon Musk

ட்விட்டர் நிறுவனத்தின் பெயரை ‘எக்ஸ்’ என்று மாற்ற எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார்.

இன்றைய சமூக வலைதளங்களில் முக்கியமான ஒன்றாக ட்விட்டர் இருந்து வருகிறது. அரசியல், சினிமா, விளையாட்டு என உலகில் நடக்கும் ஒவ்வொரு நகர்வுகள் குறித்தும் உடனடியாக இதில் பதிவிடப்படுகிறது.

ADVERTISEMENT

எனவே தலைவர்கள் முதல் சாமானியர் வரை என உலகம் முழுவதும் சுமார் 55 கோடிக்கும் அதிகமானோர் ட்விட்டர் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.3.65 லட்சம் கோடி) விலைக்கு கடந்தாண்டு அக்டோபரில் வாங்கினார்.

ADVERTISEMENT

அன்று முதல் தினமும் ட்விட்டரில் அதிரடியான கருத்துகளை வெளியிட்டு உலக மீடியாக்களின் கண்களை எந்நேரமும் தன்பக்கம் வைத்துள்ளார்.

ட்விட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருக்க கட்டணம், நிறுவனங்களுக்கு தங்க நிற டிக், அரசாங்க அமைப்புகளுக்கு சாம்பல் நிற டிக் மற்றும் தனிநபர்களுக்கு நீல நிற டிக் என தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை எலான் மஸ்க் செய்து வருகிறார்.

ADVERTISEMENT

இந்நிலையில் தான்,  ”ட்விட்டர் நிறுவனத்தின் பெயரை ’எக்ஸ்’ என்று மாற்ற எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார். இதன் தொடர்ச்சியாக X.COM என்ற இணையப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதை கிளிக் செய்தால் அது தானாக ட்விட்டர் பக்கத்திற்கு எடுத்து செல்லும். இன்று(ஜூலை 24)  ட்விட்டர் லோகோவில் இருக்கும் நீல நிறப் பறவை நீக்கப்படும், அதையடுத்து எக்ஸ் கொண்டு வரப்படும். பின்னர், இதில் பல்வேறு மாற்றங்கள் வரும்.

எக்ஸ் நிறுவனம்தான் இனி எதிர்காலம், வீடியோ, ஆடியோ, மெசேஜிங், பேமெண்ட், பேங்கிங் எல்லாம் சேர்ந்து ஒரே இடத்தில இருக்கும் விதமாக ஒரு பிராண்டாக  இருக்கும்.

எல்லா சேவைகளையும்  அளிக்கும் இடமாகவும்  இருக்கும். ஏஐ மூலம் இது செயல்படுத்தப்படும். எக்ஸ் நம்மை எல்லாம் இணைக்க போகிறது” என்று ட்விட்டர் சிஇஓ யாக்கரினா தெரிவித்துள்ளார்.

முன்னதாக, எலான் மஸ்க் தன்னுடைய ட்விட்டர் முகப்பு படத்தை எக்ஸ் என்று மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

அஸ்வின் சுழல்: வெற்றி பெறுமா இந்தியா?

திருப்பதியில் ஆன்லைன் டிக்கெட் வெளியீடு எப்போது?

கங்குவா ஃபர்ஸ்ட் லுக்: போர்வீரனாக சூர்யா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share