மழையில் பழுதான வாகனங்களுக்கு இலவச சர்வீஸ்: டிவிஎஸ் நிறுவனம்!

Published On:

| By Monisha

TVS announce free service

சென்னை வெள்ளத்தில் பழுதான வாகனங்களை டிசம்பர் 18 ஆம் தேதி வரை இலவசமாக பழுது பார்த்து கொள்ளலாம் என்று டிவிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. TVS announce free service

மிக்ஜாம் புயலால் பெய்த கனமழை ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து சென்னை படிப்படியாக மீண்டு வருகிறது. வெள்ளம் வடிந்தாலும் ஏராளமான பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

குறிப்பாக வெள்ளத்தில் ஏராளமான இருசக்கர வாகனங்களும் கார்களும் மூழ்கி சேதமடைந்தன. இதனை எப்படி சரி செய்வது என்று வாகன உரிமையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

இந்நிலையில் டிவிஎஸ் தமிழ்நாடு, புதுச்சேரி,  ஆந்திரா மாநிலங்களில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக பழுது பார்த்து தருவதாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து டிவிஎஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ வெளியிட்ட அறிக்கையில், “ மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் பழுதான வாகனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவசமாக இன்று முதல் டிசம்பர் 18 ஆம் தேதி வரை பழுது பார்த்து தரப்படும்.

அருகில் உள்ள டிவிஎஸ் சர்வீஸ் செண்டருக்கு சென்று பழுதான வாகனங்களை பழுது பார்த்து கொள்ளலாம். மழையில் பழுதான வாகனங்களை ரீஸ்டார்ட் செய்து பார்க்க வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இதனிடையே பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசும், தன்னார்வலர்களும் தொடர்ந்து நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டிற்கு நிவாரண நிதியாக ரூ.5,060  கோரியதில் கோடி மத்திய அரசு ரூ.450 கோடி ஒதுக்கியுள்ளது. தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் அவரது ஒரு மாத சம்பளத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியதோடு எம்.பி, எம்.எல்.ஏக்கள் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் வெள்ள பாதிப்பு நிவாரண பணிகளுக்காக டிவிஎஸ் நிறுவனம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.3 கோடி வழங்கியுள்ளது. டிவிஎஸ் குழுமத் தலைவர் வேணு சீனிவாசன் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.3 கோடிக்கான காசோலையை வழங்கினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

’கலைஞர்‌ 100’ நிகழ்ச்சி ஒத்திவைப்பு!

IPL2024: வெயிட்ட கொறைக்க சொல்லுங்க ஐபிஎல்க்கு எடுத்துக்கிறேன்… யாரை சொன்னாரு தோனி?

TVS announce free service

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share