ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு- தனியார் பள்ளிக்கு நாளை விடுமுறை- பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Published On:

| By Mathi

Vijay TVK Erode

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நாளை (டிசம்பர் 18) ஈரோட்டில் நடைபெறுகிறது.

கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து தமிழகத்தில் விஜய் நடத்தும் முதல் பொதுவெளி பிரசாரம் ஈரோட்டில் நாளை நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

விஜய்யின் நாளைய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர்.

ஈரோடு விஜய் கூட்ட ஏற்பாடுகள் விவரம்

ADVERTISEMENT
  • பெருந்துறை அருகே விஜயமங்கலம் சரளை பகுதியில் உள்ள மைதானத்தில் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
  • இந்நிகழ்ச்சியை முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடத்த போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
  • தவெக நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர்- கொங்கு மண்டல அமைப்புச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
  • தவெக தொண்டர்கள்10,000 பேர்; பொதுமக்கள் 25,000 பேர் பங்கேற்க உள்ளனர்.
  • மொத்தம் 16 ஏக்கர் பரப்பளவில் இந்நிகழ்ச்சிக்கான மைதானம் தயார்
    செய்யப்பட்டுள்ளது.
  • விஜய் வழக்கம் போல தமது பிரசார வாகனத்தின் மீது நின்று பேசுகிறார்.
  • இந்த மைதானம் பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் சுமார் 500 பேர் நிற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் இரும்பு தடுப்புகளால் தடுக்கப்பட்டுள்ளது.
  • மைதானம் முழுவதும் மொத்தம் 40 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
  • 24 ஆம்புலஸ்சுகள் தயார் நிலையில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • 72 மருத்துவர்கள்- 120 நர்சுகள் அடங்கிய குழு மருத்துவ முகாம்களில் பணியாற்றுவர்.
  • பொதுமக்களுக்கு 20 இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
  • 20 கழிவறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
  • 80 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • மைதானத்தில் இருந்து பொதுமக்கள் வெளியேற 14 வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • காவல்துறை கண்காணிப்பாளர் சுஜாதா தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
  • 4 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
  • மைதானம் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு நாளை ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share