தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளை கவுரவிக்கும் விதமாக கல்வி விருது விழாவை நடத்தி வருகிறது. TVK vijay surprise to hear that student speech
அதன்படி மாமல்லபுரத்தில் மூன்றாம் கட்டமாக இன்று (ஜூன் 13) நடைபெற்ற விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று கோவை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 306 மாணவ, மாணவிகளை கவுரவித்து வருகிறார்.
அப்போது அதிக மதிப்பெண் எடுத்த கோவை கிணத்துக்கடவு தொகுதியைச் சேர்ந்த மாணவி தேவஸ்ரீ பேசுகையில், “இப்போ நிறைய பேர் விஜய் ஏதோ பப்ளிசிட்டிக்காக இதையெல்லாம் செய்வதாக சொல்கிறார்கள். ஆனால் 20 வருஷத்துக்கு முன்னாடி எங்க அம்மாகிட்டயும் ‘நல்லா படிக்கனும்’ என்று சார் சொல்லியிருக்கிறார்.
படப்பிடிப்புக்காக கோவை வந்த அவரை பார்க்க, ஸ்கூல் கட் அடிச்சிட்டு சென்றபோது, விஜய் சார் யாரையும் பார்க்கமாட்டேன் என்றும், என்னை விட படிப்பு தான் முக்கியம், என்னை விடவும் படிப்பு கம்மியில்ல என்றும் தெரிவித்து அனுப்பி வைத்திருக்கிறார்.
ஆனால் இப்போது நான் நன்றாக படித்து என் அம்மாவின் ஆசையை நிறைவேற்றியதில் ஒரு மகளாக எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது” எனப் பேசினார்.
இதைக் கேட்டு ஆச்சரியத்தில் ஷாக் ஆன விஜய், இதுகுறித்து மேடையில் தன் அருகே நின்றிருந்த தேவஸ்ரீயின் தாயிடம் ஆவலுடன் விசாரித்த காட்சிகள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.