”ஓசில போறீங்கனு அசிங்கப்படுத்துறாங்க” : திருச்சியில் திமுகவை விளாசிய விஜய்

By christopher

|

Published on 13 Sep 2025, 3:35 PM

tvk vijay potray his trichy visit will turning point of tn politics

”பஸ்ஸில் இலவச டிக்கெட் கொடுத்துவிட்டு, ஓசில போறீங்கனு அசிங்கப்படுத்துறாங்க… அதற்கு நீங்கள் செய்யாமலே இருக்கலாமே?” என விஜய் தெரிவித்துள்ளார்.

வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தனது அரசியல் பிரச்சார சுற்றுப்பயணத்தை திருச்சியில் இன்று (செப்டம்பர் 13) தொடங்கியுள்ளார் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்.

ADVERTISEMENT

அதன்படி திருச்சி விமான நிலையத்தில் இன்று காலை 9.45 மணியளவில் வந்திறங்கிய அவர், சுமார் 5 மணி நேர பயணத்திற்கு பிறகு மரக்கடை பகுதியை வந்தடைந்தார்.

அங்கு பிரச்சார வாகனத்தின் மேற்பகுதியில் நின்றபடி, நாற்புறமும் சூழ்ந்து நிற்கும் தனது தொண்டர்களுக்கு கைக்காட்டி வணக்கம் தெரிவித்தார் விஜய்.

ADVERTISEMENT

அவர் பேசுகையில், “அந்த காலத்தில் போருக்கு செல்வதற்கு முன்பாக, குல தெய்வதை வேண்டிக்கிட்டு செல்வார்களாம். அதேபோன்று, ஜனநாயகப் போரான தேர்தலுக்கு செல்வதற்கு முன்னால் உங்கள் அனைவரையும் பார்த்துவிட்டு போகலாம் என வந்திருக்கிறேன்.

ஒரு சில மண்ணைத் தொட்டால் ரொம்ப நல்லது என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதேபோன்று திருச்சியில் துவங்கிய எல்லாமே திருப்புமுனை என்று சொல்வார்கள். அறிஞர் அண்ணா முதன்முறையாக தேர்தலில் நிற்க வேண்டும் என நினைத்தது திருச்சியில் தான். எம்.ஜி.ஆர் அவரது முதல் மாநில மாநாட்டை நடத்தியது திருச்சியில் தான். பெரியார் அவர்கள் வாழ்ந்த இடம். மதச்சார்பின்மைக்கும், மத நல்லிணக்கத்திற்கும் பெயர் பெற்ற இடம். திருச்சி வந்து உங்களையெல்லாம் பார்த்ததும் எனக்குள் ஒரு பரவசம் ஏற்பட்டுள்ளது” என திருச்சியையும், திருச்சி மக்களை பற்றிய தனது எண்ணங்களை மக்களுடன் பகிர்ந்துகொண்டார்.

ADVERTISEMENT

மேலும், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை பட்டியலிட்ட விஜய் அதையெல்லாம் செய்தீர்களா என தமிழக அரசை நோக்கி கேள்வி எழுப்பினார். பின்னர் திருச்சிக்காக அறிவிக்கப்பட்டு, நிறைவேற்றப்படாமல் இருக்கும் திட்டங்களை குறிப்பிட்டு அதெல்லாம் ஏன் செய்யவில்லை என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து அவர், “அதெல்லாம் பெரிய மோசடி நடந்துகிட்டு இருக்கு. அதுதான் கிட்னி திருட்டு. ஏழை மக்களிடம் பணத்தைக் காட்டி இந்த மோசடி நடந்து வருகிறது. அது எங்கே நடக்கிறது தெரியுமா? திமுக எம்.எல்.ஏவுக்கு சொந்தமான மருத்துவமனையில் நடக்கிறது. அதை கேட்டால், திருட்டில்லை என்கிறார்கள்” என்றார்.

மேலும், “பெண்களுக்கு மாதம் ஆயிரம் கொடுக்குறீங்க. ஆனால் அதையும் எல்லோருக்கும் கொடுக்காமல், ஆயிரம் கொடுத்துவிட்டோம் கொடுத்துவிட்டோம் என சொல்லி சொல்லி காட்டுகிறீர்கள். பஸ்ஸில் இலவச டிக்கெட் கொடுத்துவிட்டு, ஓசில போறீங்க ஓசில போறீங்கனு அசிங்கப்படுத்துறீங்க… அதற்கு நீங்கள் செய்யாமலே இருக்கலாமே?” என விஜய் பேசினார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

christopher

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel