அதிகரிக்கும் போராட்டம் : வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக விஜய் மனு!

Published On:

| By christopher

tvk vijay plea against waqf amendment bill 2025

வக்ஃப் சட்டத்திருத்த சட்டத்திற்கு எதிராக தவெக தலைவர் விஜய் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே கடந்த 2ஆம் தேதி வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனை அரசியலமைப்புக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் போராட்டமும் வெடித்து வருகிறது. tvk vijay plea against waqf amendment bill 2025

அதனைத் தொடர்ந்து வக்ஃப் திருத்த சட்டத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அதற்கு எதிராக தவெக சார்பில் மாவட்டந்தோறும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார். அதன்படி கடந்த 4ஆம் தேதி தமிழகம் முழுவதும் அவரது கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் அடுத்தக்கட்டமாக, வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார் விஜய். இதனை அவசர வழக்காகவும் விசாரிக்க விஜய் தரப்பில் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பில் வக்ஃப் மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் இடம்பெற்றிருந்த ஆ. ராசா, காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவத், மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, ஆம் ஆத்மி தரப்பிலிருந்து எம்எல்ஏ அமனத்துல்லா கான், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி என இதுவரை 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில் தற்போது விஜய் சார்பில் உச்சநீதிமன்றத்தில் திருத்த சட்டத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share