அரசியலமைப்பின் மாண்பைக் காக்க உறுதியேற்போம் – விஜய்

Published On:

| By Pandeeswari Gurusamy

நாடு முழுவதும் இன்று (ஜனவரி 26) 77ஆவது குடியரசு தின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். டெல்லி செங்கோட்டையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவருமான விஜய், அரசியலமைப்பின் மாண்பைக் காக்க உறுதியேற்போம் எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் பதிவில், “வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியக் குடியரசு உருவாகக் காரணமான அனைவரையும் நினைவுகூர்ந்து போற்றுவோம். இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளான குடியரசு நாளில், அரசியலமைப்பின் மாண்பைக் காக்க உறுதியேற்போம். அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share