மதுரையில் தலைமைச் செயலக கிளை, ஆளுநர் வேண்டாம்: தவெக செயல்திட்டம்!

Published On:

| By Selvam

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த மாநாட்டில் தவெகவின் செயல்திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.

தவெக செயல்திட்டங்கள்!

தவெக ஆட்சியில் அரசியல் தலையீடு இல்லாத நிர்வாக சீர்திருத்தம்- ஊழலற்ற நிர்வாகம்;

ஜாதி-மத- பாலின சார்பின்மையுடன் அரசு நிர்வாகம்,

எம்.எல்.ஏ., அமைச்சர்களுக்கான நடத்தை விதிமுறைகள் வகுக்கப்பட்டு நெறிமுறைப்படுத்தப்படும்;

மதுரையில் தலைமை செயலக கிளை அமைக்கப்படும்,

விகிதாசார இடஒதுக்கீடு, தமிழே ஆட்சி மொழி- வழக்காடு மொழி;

தமிழ் மொழியிலேயே ஆராய்ச்சிக் கல்வி- தமிழ் வழிக் கல்வி படித்தோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை;

கீழடி உள்ளிட்ட அகழாய்வுகளுக்கு முன்னுரிமை;

மாநில தன்னாட்சி உரிமை மீட்பு,

மாநிலப் பட்டியலுக்கு கல்வியை கொண்டுவர நடவடிக்கை,

ஆளுநர் பதவி ஒழிக்கப்படும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இருமொழிக் கொள்கை, தமிழ் ஆட்சிமொழி: தவெக கொள்கை அறிவிப்பு!

தவெக மாநாட்டில் மயக்கம் ஏன்? – மருத்துவர் விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share