கூத்தாடி பயல்கள்.. ரஜினிகாந்த், விஜய் குறித்து வேல்முருகன் சரவெடி விமர்சனம்! தவெக கொந்தளிப்பு!

Published On:

| By Minnambalam Desk

TVK Velmurugan

சினிமா நடிகர்களை மாணவிகள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க அனுமதிப்பதா தமிழர் கலாசாரம்? போயஸ் கார்டனில் நடிகனின் தரிசனத்துக்கு காத்திருப்பதால் வீட்டில் உலை வெந்துவிடுமா? என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார். Velmurugan’s Fiery Attack on Rajinikanth and Vijay

சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேல்முருகன் எம்.எல்.ஏ. பேசியதாவது: இன்னிக்கு யாரோ 2 படத்தில் நடிச்சுட்டு சூப்பர் ஸ்டாரான உடனே, நான்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிறான்.. 2 கிராம் பரிசு கொடுத்த உடனேயே.. நம்ம முட்டாபய.. நான் நடிகனை குறை சொல்லமாட்டேன்.. ஒரு வயசு பொண்ணை கூட்டிகிட்டு போறான்..பிளஸ் 2 முடிச்சு டிகிரி முடிக்க போற கல்லூரிப் பெண்களை கூட்டிகிட்டு போறான்.. அறிவு வேண்டாமா?

கூத்தாடி பயலை கட்டிப் பிடித்து முத்தம் தருவதா?

பெத்து வளர்த்து ஆளாக்கிய பெண், நாளைக்கு மாற்றான் மனைவியாக வாழ வேண்டிய பெண், அப்பன் ஆத்தா எதிரில், ஆயிரக்கணக்கான ஊடகங்கள், பத்திரிகையாளர்கள் முன்பு ஒரு சினிமா கூத்தாடி பயலை கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்கிறதை அனுமதிக்கிறாய்.. இவன் என்ன ஈனப்பிறவி? தமிழனோட பிறவியா இது? விஜய் நடிச்சிருகிறாரா? பாராட்டுங்க.. அஜித்தைப் பாராட்டுங்க, ரஜினியைப் பாராட்டுங்க..பச்சைத் தமிழன் நம்முடைய சத்யராஜைப் பாராட்டுங்க.. அதைவிட்டு விட்டு இது மாதிரி எப்படி பெற்றோர் அனுமதிக்கிறீங்க? இதுவா தமிழ்ச் சமூகம்? இதுவா தமிழனோட கலாசாரம்?

கூத்தடிச்சுவிட்டு தரிசனம் தரும் நடிகர்

தென்னாட்டின் ஜான்சிராணி அஞ்சலை அம்மாளின் பிறந்த நாளில் சொல்கிறேன்.. எந்தக் கூத்தாடி பயல் வீட்டு வாசலிலேயேயும் தமிழ்ப் பிள்ளைகள் போய் நிற்க வேண்டாம். எந்த கூத்தாடி பயலுக்கு பிறந்த நாளா இருந்தா உங்களுக்கு என்ன? அவன் படம் 100 நாள் ஓடுனா என்ன? ஓடாவிட்டால் என்ன? அவரு வந்து காலையில் 11 மணிக்கு தரிசனம் தருவாரா? அவன் விடிய விடிய கூத்தடிச்சுட்டு சரக்கடிச்சுட்டு கும்மாளமடிச்சுட்டு தூங்குவானாம்.. அவன் போயஸ் கார்டனில் வெளியில வந்து தரிசனம் கொடுக்கும் வரை இவன் நிப்பானாம்.. அய்யோ தலைவா என்பானாம். ஏன்டா அவனா உனக்கு சோறு போடப் போறான்? அவனால்தான் உனக்கு உலை கொதிக்க போகுதா?அவனா உன் பிள்ளைக்கு பீஸ் கட்ட போறான்? அவனா உனக்கு ரோடு போட்டு தரப்போறான்?

டிவி ஷோக்கள் மீது தாக்கு

இன்னொன்று டிவி ஷோ.. இங்கே வந்துள்ள முத்துலட்சுமி அக்கா உள்ளிட்ட பெண்களுக்கு வேலை இருக்கிறது. உங்ககிட்ட இருக்கிற துடைப்பத்தை எடுத்துக் கொண்டு போங்க.. ஆளைப் பார்த்து நேரம் பார்த்து சொல்றேன்.. பொதுவெளியில சட்டையைப் பிடித்து செருப்பாலேயே சப்பு சப்புன்னு அறையனும்.. நிகழ்ச்சி நடத்துறவனை.. நீ ரெடியா? நான் ரெடி.. பாட்டுக்கு பாட்டு.. இப்படி பல நிகழ்ச்சிகள்.. இப்பதான் தமிழ்த் தேசிய தம்பிகள் எல்லாம் இந்த அண்ணன் திரும்பி இருக்காங்க.. திரும்பட்டும் வெச்சுக்கிறேன் கச்சேரியை..

ஈசிஆரில் மோசமான கலாசாரம்

ஈசிஆரில் ஒரு புதிய கலாசாரம் உருவாகி இருக்கிறது.. சீட்டு குலுக்கிப் போட்டு ஒருவன் மனைவியை இன்னொருவன் பகிர்ந்து கொள்கிறானாம்.. வர்றேன் ஒரு நாளைக்கு ஈசிஆருக்கு தமிழர் படையுடன்.. உள்ளே நுழையறேன்.. உங்க பங்களாவை கைப்பற்றுவேன்.. எங்க மகளிரை கூட்டி வந்து செருப்பாலேயே அடிக்க வைக்கிறேன். இவ்வாறு பண்ருட்டி வேல்முருகன் எம்.எல்.ஏ. பேசினார்.

தவெக கொந்தளிப்பு

நடிகர் விஜய் குறித்த வேல்முருகன் எம்.எல்.ஏ.வின் விமர்சனத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் வேல்முருகனை தமிழக வெற்றிக் கழகத்தினர் கடுமையாக விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share