புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. புதுவை தேர்தலில் போட்டியிடும் 30 வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று மார்ச் 22-ந் தேதி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக விஜய் வெளியிட்ட அறிக்கை:
வருகின்ற 09.04.2026 அன்று நடைபெற உள்ள புதுச்சேரி சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்துக் களம் காண்கிறது என்பதை அனைவரும் அறிவீர்கள். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விருப்ப மனு அளித்தவர்களிலிருந்து இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில், அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்காணும் தோழர்கள், குறிப்பிட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள்.
- லாஸ்பேட்டை: வி. சாமிநாதன்
- காரைக்கால் தெற்கு: கே.ஏ.யூ. அசனா
- நெட்டப்பாக்கம் (தனி): எல். பெரியசாமி
- திருபுவனை (தனி): ஏ.கே. சாய் ஜே. சரவணன் குமார்
- முத்தியால்பேட்டை: ஜே. பிரகாஷ் குமார்
- பாகூர்: தனவேலு
- ராஜ் பவன்: வி.ஜே. சந்திரன்
- உப்பளம்: எஸ். சிவா
- உழவர்கரை: எஸ். சசிபாலன்
- அரியாங்குப்பம்: எஸ். குமரவேலு
- மணவெளி: பி. இராமு
- வில்லியனூர்: ஆர். ரமேஷ்
- முதலியார்பேட்டை: என். மணிபாலன்
- மண்ணாடிப்பட்டு: கே. பாரதிதாசன்
- உருளையன்பேட்டை: எஸ். மரிய பிரான்சிஸ்
- மங்கலம்: எம்.கே. சத்யா
- காமராஜ் நகர்: டாக்டர் ஆர். சுமன்
- நெல்லித்தோப்பு: எஸ். விக்னேஷ்வரன்
- காலாப்பட்டு: டி. சசிக்குமார்
- இந்திரா நகர்: எஸ். முருகன்
- கதிர்காமம்: ஆர். ஜெயந்தி
- ஊசுடு (தனி): எஸ். சரவணபவா
- தட்டாஞ்சாவடி: எம். பன்னீர்செல்வம்
- ஏம்பலம் (தனி): வி. தமிழ்ச்செல்வன்
- நெடுங்காடு (தனி): யூ. காமராஜ்
- திருநள்ளாறு: ஏ. ராஜா முஹம்மது
- காரைக்கால் வடக்கு: ஏ. வெங்கடேஷ்
- நிரவி – டி.ஆர். பட்டினம்: ஜி. கணேஷ்
- மாகே: எம். பிரிஜேஷ்
- ஏனாம்: ஏ. தோட்டா ராஜு
புதுச்சேரியில் ஏப்ரல் 9-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. புதுவையில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய நாளை மார்ச் 23-ந் தேதி கடைசி நாள்.
