ADVERTISEMENT

புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோக்கு அனுமதி கேட்டு கடிதம்

Published On:

| By Pandeeswari Gurusamy

3

புதுச்சேரியில் விஜய்யின் ரோடுஷோக்கு அனுமதி கேட்டு தவெகவினர் காவல்துறைக்கு கடிதம் அளித்துள்ளனர்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த தவெக பிரச்சார கூட்டத்தில் நடிகரும், அக்கட்சித் தலைவருமான விஜய் பேசிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து விஜய்யின் பயணத்திட்டங்கள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது. கரூர் பெருந்துயர வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் தற்போது விஜய் மீண்டும் தனது பிரச்சார பயணத்தை தொடங்க உள்ளார்.

ADVERTISEMENT

முன்னதாக கடந்த ஞாயிறன்று காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரியின் உள்ளரங்கில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் ஆளும் திமுக அரசு மீதும், முதல்வர் ஸ்டாலின் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

இந்த நிலையில் அடுத்த மாதம் ஐந்தாம் தேதி விஜய் புதுச்சேரிக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து விஜய் புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி தவெகவினர் காவல்துறையில் கடிதம் அளித்துள்ளனர்.

ADVERTISEMENT

அந்தக் கடிதத்தில், தவெக தலைவர் விஜய் காலாப்பட்டு, அஜந்தா சிக்னல், உப்பளம், வாட்டர் டேங்க், மரப்பாலம், அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோயில் ஆகிய பகுதிகள் வழியாகச் சென்று மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்கிறார் என்று கூறப்பட்டிருக்கிறது. காலை 9:00 மணி முதல் 5:00 மணி வரை நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்குமாறு தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது ஆனால் இந்த மனுவில் கூட்டத்தில் பங்கேற்கும் தொண்டர்களின் எண்ணிக்கை குறித்த எந்தவித தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து நாளை விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக சேலத்தில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கேட்டிருந்த நிலையில் கார்த்திகை தீபத்தை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் தவெகவினர் புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பி உள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share