மகளிர் அணி நிர்வாகியுடன் தகாத உறவு : தவெக மா.செ. பதவி பறிப்பு!

Published On:

| By Kavi

தமிழக வெற்றிக் கழக நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்து வந்த ஜே.ஜே. செந்தில்நாதன், கட்சி பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த ஜே.ஜே. செந்தில்நாதன், நடிகர் விஜய்யின் நீண்டகால ரசிகர் மன்றத் தலைவராக இருந்து, பின்னர் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தொடங்கப்பட்டதும் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பேற்றார்.

ADVERTISEMENT

இவர் வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் கூட்டப்பள்ளி பகுதியில் உள்ள அக்கட்சியின் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் வீட்டிற்குச் சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தை அறிந்த அந்தப் பெண் நிர்வாகியின் கணவரும் உறவினர்களும் திடீரென வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளனர். பின்னர், அங்கிருந்த செந்தில்நாதனை திட்டி வீட்டை விட்டு விரட்டியுள்ளனர்.

ADVERTISEMENT

இதுதொடர்பான வீடியோ காட்சிகள், தவெக தலைமைக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.

இந்தசூழலில் தான் தவெக தலைமை, செந்தில்நாதனை நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

கட்சிப் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தவெக தலைமை எச்சரித்துள்ளது. 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share