விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் வருகிற 27ஆம் தேதி நடக்கவிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கான ஏற்பாடு பணிகள் தொடர்ந்து சிக்கல்களைச் சந்தித்து வருகிறது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால் போலீஸ் அனுமதி கிடைக்காததால் அக்டோபர் 27ஆம் தேதி மாநாடு நடத்தப்படும் என்று கட்சித் தலைமை அறிவித்தது.
விக்கிரவாண்டியில் மாநாட்டுப் பணிகள் நடந்து வரும் நிலையில், அதுதொடர்பான நேரடி ரிப்போர்ட்டை”ரிலாக்ஸ் விஜய் பதட்டத்தில் போலீஸ்” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
மேலும் மாநாடு நடக்கும் பகுதியில் கார்பார்க்கிங் இடங்களை தயார் செய்வதற்கான பணிகள் வேகப்படுத்தப்படும் என்று நேற்று(அக்டோபர் 14) போலீசாரிடம் தவெகவினர் கூறியிருந்தனர்.

ஆனால் மாநாடு பணிகள் மிகவும் சுணக்கமாக நடந்து வருகிறது என்பதைப் பற்றி நாம் நேற்றுதவெக மாநாடு – என்ன செய்ய போகிறார் விஜய்? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
வடகிழக்கு பருவமழை ஆரம்பிப்பதற்கு முன்பே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்திலும் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இதனால் தவெக மாநாடு நடக்கவிருக்கும் வி.சாலை பகுதி சேறும் சகதியுமாகக் காட்சியளிக்கிறது. இதனால் மாநாடு நடைபெறுமா என்று சந்தேகம் மேலும் வலுத்துள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புக்கு தடை : அன்பில் மகேஸ் உத்தரவு!
கனமழையால் பாதிப்பு : உதவிக்கரம் நீட்டிய தேமுதிக… பிரேமலதா முக்கிய அறிவிப்பு!
வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: மேலும் சில மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு!
