பெரியாருக்கு தவெக தலைவர் விஜய் மரியாதை

Published On:

| By Pandeeswari Gurusamy

பெரியாரின் சமத்துவப் பாதையில் பயணித்து, சமூக நீதியை வென்றெடுக்க உறுதியேற்போம் என நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியாரின் 52 ஆவது நினைவு இன்று. இன்று தவெக அலுவலகத்தில் பெரியார் படத்திற்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இது குறித்த புகைப்படத்தை விஜய் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ளார். மேலும், “சமூக நீதியின் முன்னோடி, சமூகத்தில் புரையோடிப்போயிருந்த மூட நம்பிக்கைகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் தகர்த்தெறியப் போராடிய பகுத்தறிவுப் போராளி, எமது கொள்கைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளில், அவரின் திருவுருவப் படத்திற்கு எமது அலுவலகத்தில் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினேன்.

ADVERTISEMENT

தந்தை பெரியார் அவர்கள் காட்டிய சமத்துவப் பாதையில் பயணித்து, சமூக நீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்.” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share